-->

தந்தூரி சிக்கன் -Tanddori Chicken




அருமையான தந்துரி சிக்கன்

தேவையானவை :

  1. கோழி தொடை - 4
  2. எண்ணெய் - அரை லிட்டர்
  3. ஜிலேபி பவுடர் - சிறிதளவு
  4. இஞ்சி,பூண்டு விழுது - 2 ஸ்பூன்
  5. கடலை மாவு - 50 கிராம்
  6. மைதா மாவு - 50 கிராம்
  7. முட்டை வெள்ளை கரு -1
  8. சில்லி சிக்கன் பவுடர் - 50 கிராம்
  9. உப்பு - தேவையான அளவு 
  10. எலுமிச்சை பழம் - 1


செய்முறை:-

1. 
நன்கு சுத்தம் செய்த கோழியை சிறிது சிறிதாக கீறல் போடவும்.

2. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கடலை மாவு, சில்லி சிக்கன் பவுடர், இஞ்சி,பூண்டு விழுது, முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும்..

3இந்த கலவையில் எலுமிச்சை சாற்றை பிழிந்து அத்துடன் கலருக்காக சிறிது ஜிலேபி பவுடரையும் சேர்த்து அனைத்தும் ஒன்று சேர  நன்கு கலக்கவும்.

4இந்த கலவையுடன் கீறல் போட்டு வைத்துள்ள கோழி தொடை பகுதியை சேர்த்து 1 மணி நேரம் நன்கு ஊற வைக்கவும்.

5. மசாலாவுடன் கறி நன்கு ஊறியவுடன் ,வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றவும்.எண்ணெய் நன்கு கொதிக்கும் போது கறியை அதில் போட்டு நன்கு வேக விடவும்.

6.கறி வேகும் போது திருப்பி திருப்பி போட வேண்டும்.அடுப்பை மிதமான தீயில் வைக்கவேண்டும்.

7.கறி  நன்கு வெந்து பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து விடவும்.


Previous Post Next Post