-->

'ஆக்க்ஷன் கிங்' அர்ஜுனின் குடும்ப புகைப்படம்

அர்ஜுன் குடும்ப புகைப்படம்

அர்ஜுன்
1990களில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வளம் வந்தவர் நடிகர் அர்ஜுன். சண்டை காட்சிகளில் இவரின் ஈடுபாடு காரணமாக இவர் ‘ஆக்க்ஷன் கிங்’ எனவும் அழைக்கபடுகிறார். சினிமாவில் 30 வருடங்களாக தொடர்ந்து நடித்து வரும் இவர் தற்போதும் படங்களில் பிஸியாகவே உள்ளார். தமிழ் தெலுங்கு, கன்னடம், இந்தி பல மொழிகளில் நடித்து பல விருதுகள் வாங்கியுள்ளார். இவர் பல தேச பக்தி கொண்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

இயக்கம்
இவர் நடிப்பு மட்டுமின்று சில படங்களையும் இயக்கியுள்ளார். இவரிடம் உதவி இயக்குனராக இருந்தவர்தான் நடிகர் விஷால். தற்போது அவர் புதிய படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து சிறப்பாக நடித்து வருகின்றார். இவர் இரும்புத்திரை எனும் படத்தில் வில்லனாக நடித்து இருக்கிறார். அதேவேளையில் தன் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கும் சொல்லி விடவா என்கிற படத்தையும் இயக்கி வருகின்றார்.

சினிமா பின்னணி
இவரின் குடும்பமே சினிமா பின்னணி கொண்டதுதான். அர்ஜுனின் தந்தை சக்தி பிரசாத் புகழ் பெற்ற கன்னடத் நடிகர். மேலும் அர்ஜுனின் சகோதரர் கிஷோர் கன்னடத்தில் பிரபல இயக்குனர். அர்ஜுனுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் முதல் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் நடிகர் விஷாலுடன் நடித்த படத்தில் தமிழில் அறிமுகமானார்.

போட்டோ
அர்ஜுனின் இரண்டாவது மகள் அஞ்சனா அர்ஜுன், அவரது மனைவி ஆகியோர் பெரும்பாலும் வெளிவட்டாரத்திற்கு வந்தது இல்லை. இந்நிலையில் தற்போது அர்ஜுன் தனது குடும்பத்துடன் ஜாலியாக எடுத்த கொண்ட போட்டோ தற்போது வைரலாக இணையத்தில் பரவிவருகிறது. 
Previous Post Next Post