-->

இணையத்தில் தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் விமல்

நடிகர் விமல் மனைவி

விமல்
தமிழ் சினிமாவில் பசங்க படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விமல். பிறகு வந்த களவாணி படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். பசங்க படத்தில் அறிமுகமாவதற்கு முன் அவர் கில்லி, கிரீடம், குருவி, போன்ற படங்களில் அஜித், விஜய் ஆகியோருக்கு நண்பராக நடித்து வந்தார். தனது துடிப்பான நடிப்பின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் விமல்.
படங்கள்
களவாணி படத்தை தொடர்ந்து தூங்காநகரம், வாகை சூட வா, மாட்டுத்தாவணி, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை, மாப்பிள்ளை சிங்கம் என்று பல படங்களில் நடித்துள்ளார். தற்போது கன்னி ராசி மற்றும் களவாணி 2 ஆகிய படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
புகைப்படம்
இதுவரையில் தனது மனைவி மற்றும் மகன் படத்தை இணையதளத்தில் வெளியிடாத விமல் தற்போது வெளியுட்டுளார். தனது மனைவி அக்க்ஷயாவை களவாணி படபாணியில் கோவிலில் வைத்து திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது முதன் முறையாக மனைவி மற்றும் மகன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 
அறிமுகம்

விமலின் நண்பர் நடிகர் சந்தானம் தனது மகன் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டிருந்தார். மேலும், நடிகர்கள் தங்களது மகன்களை சினிமாவில் தற்போது அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் ஜெயம் ரவி தன் மகன் ஆரவ் ரவியை டிக் டிக் டிக்என்ற படத்தில் நடிக்க வைத்துள்ளார். காமெடி நடிகர் சூரி அவரது மகன் சர்வானை சுசீந்திரனின் ஏஞ்சலினா என்ற படத்தில் நடிக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post