-->

பொடி வைத்து பேசுவதில் ரஜினியை மிஞ்சிய தனுஷ்

ரஜினிக்காக பரிந்து பேசிய தனுஷ்


காலா

காலா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ரஞ்சித், தனுஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது பேசிய ரஜினிகாந்த், நதிகளை இணைப்பதே என் வாழ்நாளின் முக்கிய கனவு. அதை செய்த பின் என் கண்கள் மூடினாலும் பரவாயில்லை என கூறினார்.

தனுஷ்

அவரை தொடர்ந்து பேசிய நடிகரும், ரஜினியின் மருமகனுமான தனுஷ் ஒருவர் பிரபலமானவதற்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று கடுமையாக உழைத்து உயர்ந்த நிலைக்கு வருவது. மற்றொன்று, அப்படி வந்தவர்களை விமர்சனம் செய்து பிரபலம் ஆவது. ரஜினியால் வாழ்ந்தவர்கள், அவரை வைத்து பணம் சம்பாதித்தவர்கள் இன்று அவரை விமர்சனம் செய்கிறார்கள். இது சங்கடமாக இருக்கிறதுஎனப் பேசினார்.

நாளை

தொடர்ந்து பேசிய அவர், காய்த்த மரம் தான் கல்லடிபடும். தன்மை விமர்சித்தவர்களுக்கும் அவர் படத்தின் அழைப்பிதழை கொடுக்கச் சொன்னார். ரஜினி அவர்கள் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் அவர் ஒரு வில்லன், பின் குணச்சித்திர நடிகர், அப்புறம் ஸ்டைல் மன்னர், அடுத்து சூப்பர் ஸ்டார், இன்று தலைவர், நாளை? அது இறைவன் கைகளில் இருக்கிறது." என்றார் பொடி வைத்து பேசினார் தனுஷ்.

விமர்சனங்கள்

அரசியலுக்கு வருகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்த பின் அவர் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறார். அவர் பேசினாலும், பேசாவிட்டாலும் அது செய்தியாகிறது. சமீபத்தில் கூட பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோர் ரஜினியை கடுமையாக விமர்சித்தனர். நேற்று கூட அமைச்சர் ஜெயக்குமார் காலா படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்காக ரஜினியை விமர்சித்து பேசியது குறிப்படத்தக்கது.
Previous Post Next Post