-->

இன்று நகைச்சுவை நடிகர் கவுண்டமணி பிறந்த நாள்

கவுண்டமணி செந்தில்

கவுண்டமணி
கவுண்டமணிஎனும் பெயர் இல்லாமல் தமிழ் சினிமாவின் நகைச்சுவை பக்கங்களை நிரப்ப முடியாது. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் கொடிடி கட்டி பறந்தவர் கவுண்டமணி. அவர் இன்று தனது 79-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

சுப்பிரமணி
கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள ‘வல்லக்கொண்டபுரம்’ கிராமத்தில் பிறந்தவர் கவுண்டமணி. இவரது இயற்பெயர் சுப்பிரமணி. அவர் நடித்த நாடகம் ஒன்றில் ‘ஊர் கவுண்டர்’ என்ற கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்தார். இதனால் அவருக்கு கவுண்டமணி என்ற பட்ட பெயர் வந்தது. தனது 26 வயதில் இருந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அறிமுகம்
திரையுலகில் இயக்குனர் பாரதிராஜாவால் 16 வயதினிலே படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதற்கு முன்பு மேடை நாடகங்களில் நடித்து வந்தார் இவர். ஆரம்ப காலங்களில் தனியாகவே நகைச்சுவை நடிகராக நடித்தார், பின்னர் செந்திலுடன் இணைந்து நகைச்சுவை காட்சிகளில் நடிக்க ஆரம்பித்ததும் நகைச்சுவையில் உச்சத்தை தொட்டார்.

கதாநாயகன்
சில படங்களில் கதாநாயகனாவும் நடித்துள்ளார். இரண்டு தலைமுறை இரசிகர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்திருக்கிறார். அவரது பேச்சும், நையாண்டியும் மக்களிடையே மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. ஒரு காலத்தில் கவுண்டமணி இல்லாமல் திரைப்படங்களே வெளியாகவே இல்லை என்று சொல்லாம். தமிழ் சினிமாவில் அணைத்து உச்ச நட்சத்திங்களோடும் நடித்தவர்.

கவுண்டமணி நகைச்சுவை நடிகர்

கவுண்டமணி – செந்தில்
இதுவரை அவர் 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். செந்திலுடன் இவர் கூட்டணி அமைத்து நடித்த படங்கள் சக்கை போடு போட்டன. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.

நையாண்டி வசனங்கள்
'பார்த்தால் காமெடியன், பேச்சில் அறிவாளி' என்று கவுண்டமணி குறித்து பிரபல இயக்குனர் மணிவண்ணன்கூறுவார். உலக சினிமா மீதும் தத்துவங்கள் மீதும் அதீத ஆர்வம் கொண்டவர் கவுண்டமணி. அதனால்தான் சினிமாவில் அரசியல் நையாண்டி வசனங்களை அதிகமாக பயன்படுத்துவார். மேலும் கடவுள் நம்பிக்கையும் அதிகம் உள்ளவர்.

நையாண்டி வசனங்கள்

அதேபோல கவுண்டமணியின் உடல்அசைவும், நடனமும், விழிப்புணர்வு கருத்துகளும் பிரபலம் வாய்ந்தவை. நீரழிவு நோய் பாதித்த பிறகு அவர் சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். ஆனால் இன்றும் இணையத்தில் மீம்ஸ் போடும் இளைய தலைமுறையினரின் ஆஸ்தானகுருவே கவுண்டமணிதான் என்றால் மிகையில்லை. அதனால் தான் தலைமுறைகளை கடந்து இன்றும் அவர் பிரபலமாக இருக்கிறார். நம்மையெல்லாம் சிரிக்க வைத்து நம் கவலைகளை போக்கிய அவர் இன்னும் நீண்ட காலம் வாழ வாழ்த்துவோம்.
Previous Post Next Post