-->

பயிற்சியாளர் என்னை சுதந்திரமாக செயல்பட விடவில்லை - சென்னை சூப்பர் கிங்க்ஸ் கேப்டன் தோணி


சென்னை அணியின் பயிற்சியாளர்

ராஜஸ்தான் வெற்றி
ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 43-வது லீக் ஆட்டத்தில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில், சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற நிலையில் இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நிராகரிப்பு
இந்த போட்டியில் டாஸில் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, செய்தியாளர்களிடம் பேசுகையில், எனக்குக் களத்தில் நீண்ட நேரம் நின்று பேட்டிங் செய்யவே விருப்பம். ஆனால், எனது ஆசைக்குப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தடைவிதித்துவிட்டார். ஆடும் லெவனின் பேட்டிங் வரிசையில் அதிக மாற்றங்களை உருவாக்க கூடாது. அது ஆட்டத்தின் நிலைத்தன்மையை குலைத்துவிடும் என்று கூறிவிட்டார்.

பேட்டிங் வரிசை
ஆதனால், நான் தற்போது 4 வது அல்லது 5-வது வரிசையில் களமிறங்குகிறேன். எனக்கு 2வது விக்கெட்டில் களமிறங்கி நீண்ட நேரம் விளையாடி ரன்களைச் சேர்க்க வேண்டும் என்பதுதான் விருப்பம். ஆனால், இதற்குப் பயிற்சியாளர் ஸ்டீபன்பிளெமிங் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால், சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையில் எந்தவிதமான சோதனை முயற்சியும் செய்ய முடியாமல் இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.

சராசரி
சென்னை அணியின் கேப்டன் தோனி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 360 ரன்கள் அடித்துள்ளார். இவரின் சராசரி 90 ஆக இருக்கிறது. 4-வது அல்லது 5-வது வரிசையில் களமிறங்கிவரும் தோனி, இந்த சீசனில் 3 அரைசதங்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

5-வது வீரராக களமிறங்கும்போது, ஏறக்குறைய 15 ஓவர்களுக்கு மேல்தான் தோனி பேட் செய்கிறார். இதனால் அடித்து ஆட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார், இதன் காரணமாக விக்கெட்டுகளையும் இழக்க வேண்டியது இருக்கிறது.

நிராகரிப்பு
பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்யக்கோரியும், தன்னுடைய விருப்பத்தையும், சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங்கிடம் கூறியும் அதை நிராகரித்துவிட்டதாக கேப்டன் தோனி கூறியுள்ளார். தோணி இவ்வாறு கூறியது தற்போது விவாத பொருளாகியுள்ளது.


Previous Post Next Post