-->

பிக் பாஸ் - 2 நிகழ்ச்சியின் டீசரை வெளியிட்டார் கமலஹாசன்




பிக்பாஸ் 2 டீசர்
பிக்பாஸ் இரண்டாம் பாகம் அடுத்தமாதம் முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்கான டீசரை நடிகர் கமல் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் நேற்று மாலை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ்
கடந்தாண்டு விஜய் டிவியில் ஒளிபரப்ப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி அரம்பத்தில் சில எதிர்ப்புகளை சந்தித்தாலும் போக போக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. நடிகர் கமல் தொகுத்து வழங்கிய அந்நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றி பெற்றார்.

கட்சி பணிகள்
தற்போது தனது கட்சியின் அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் கமல், பிக்பாஸ் 2வை தொகுத்து வழங்க மாட்டார் எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால், தனது அரசியல் பணிகளுக்கு இடையே பிக்பாஸ் 2 நிகழ்ச்சியையும் கமல் தொகுத்து வழங்க இருக்கிறார்.

டீசர் வெளியீடு
நேற்று மாலை பிக்பாஸ் 2-ன் டீசர் வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் மாலை 5 மணிக்கு டீசரை வெளியிட்டார். இரவு 7 மணி முதல் விஜய் டிவியில் இந்த டீசர் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த டீசரில் கமல் கூறியிருப்பதாவது, 'மீண்டும் நான் என் மக்களைச் சந்திக்க வருகிறேன். உங்கள் நான்' எனத் தெரிவித்துள்ளார். முதல் சீசன் போலவே இரண்டவது சீசனிலும் செட் அமைப்புகள் மிக பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டியாளர்கள்
பிக்பாஸ் 2வது  சீசனில் கலந்து கொள்ள போகும் பிரபலங்கள் யார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த இரண்டாவது சீசனில் கலந்து கொள்ளப் போகும் போட்டியாளர்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக இருக்கிறது


Previous Post Next Post