அசத்தலான செட்டிநாடு நெத்திலி கருவாட்டு குழம்பு - Asathalana Chettinadu Nethili Karuvattu Kuzhambu - Expres Tamil

Header Ads

அசத்தலான செட்டிநாடு நெத்திலி கருவாட்டு குழம்பு - Asathalana Chettinadu Nethili Karuvattu Kuzhambu

ருசியான நெத்திலி குழம்பு

தேவையான பொருட்கள்:
 1. நெத்திலி கருவாடு 
 2. கடுகு - 1 டீஸ்பூன்
 3. சீரகம் - 1 டீஸ்பூன்
 4. உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
 5. வரமிளகாய் - 2
 6. கறிவேப்பிலை – சிறிது
 7. சின்ன வெங்காயம் - 15-20 (தோல் நீக்கியது)
 8. தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
 9. மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
 10. மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
 11. மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
 12. புளிச்சாறு - 3 டேபிள் ஸ்பூன்
 13. மாங்காய் - 1 (நீளமாக நறுக்கியது)
 14. உப்பு - தேவையான அளவு
 15. சர்க்கரை - 1 டீஸ்பூன்
 16. எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
 17. தண்ணீர் - தேவையான அளவு


செய்முறை:

1. முதலில் நெத்திலி கருவாடை வெந்நீரில் போட்டு 10 நிமிடம் ஊற வைத்து, பின் வடிகட்டி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.

2. பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

3. பின்பு அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தக்காளியை சேர்த்து நன்கு கரைந்து வரும் வரை வதக்கவும்.

4. பிறகு அதில் மாங்காய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.

5. மாங்காய் பாதியாக வெந்ததும், உப்பு, மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து கிளறி, புளிச்சாற்றினை ஊற்றி, எண்ணெய் தனியாக பிரியும் வரை குழம்பை நன்கு கொதிக்க விட வேண்டும்.

6. பின் கருவாட்டை சேர்த்து 5-10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைத்து, சிறிதளவு சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கினால், செட்டிநாடு நெத்திலி கருவாட்டு குழம்பு ரெடி.
No comments