-->

சில்லி ஃபிஷ் - Chilli Fish


ஸ்பைசி சில்லி பிஷ்

தேவையானவை :

  1. வஞ்சரம் மீன் -1/2 கிலோ
  2. எண்ணெய் - தேவையான அளவு
  3. தயிர் - 1/2 கப்
  4. சோய் சாஸ் -அரை டேபிள் ஸ்பூன்
  5. கரம் மசாலா -ஒரு டேபிள் ஸ்பூன்
  6. மிளகாய் தூள் -ஒரு டேபிள் ஸ்பூன்
  7. இஞ்சி பூண்டு விழுது -ஒரு டேபிள் ஸ்பூன்
  8. பச்சை மிளகாய் -5 (பொடியாக நறுக்கியது)
  9. சில்லி சாஸ் -ஒரு டேபிள் ஸ்பூன்
  10. உப்பு -ஒரு டேபிள் ஸ்பூன்
  11. எலூமிச்சை சாறு -ஒரு டேபிள் ஸ்பூன்
  12. சிவப்பு கலர் -ஒரு சிட்டிகை


செய்முறை :

1. முதலில் தயிர்,கரம் மசாலா,மிளகாய் தூள்,இஞ்சிபூண்டு விழுது,பச்சைமிளகாய் ,சில்லி சாஸ், எலூமிச்சை சாறு,சிவப்பு கலர்,உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.

2. வஞ்சிரம் மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.

3. ஒவ்வோரு மீனையும் கலந்து வைத்துள்ள மசாலா கலவையில் முக்கி எடுத்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

4. பின்னர் தோசை  தவாவில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ஒவ்வொரு மீனாக வைத்து, திருப்பி போட்டு, இரண்டு பக்கமும் நன்கு வெந்து சிவந்து வந்ததும் எடுத்து விடவும்.

5. சுவையான சில்லி பிஷ் ரெடி.


Previous Post Next Post