-->

பழம்பெரும் நகைச்சுவை, குணசித்திர நடிகர் நீலகண்டன் காலமானார்

நீலகண்டன் என்கிற நீலு

நீலகண்டன் என்கிற நீலு

தமிழ் சினிமாவில் இயக்குனர் முக்தா சீனிவாசன் இயக்கத்தில், நடிகர் ஜெய் சங்கர் நடித்து 1969 ஆண்டு வெளியான படம் 'ஆயிரம் பொய்'. இந்த படத்தில் காமெடி கதாப்பாத்திரத்தில் அறிமுகமானவர் நீலகண்டன் என்கிற நீலு.

குணச்சித்திர நடிகர்

பம்மல் கே சம்பந்தம், கல்யாண சமையல் சாதம், அந்நியன் உள்ளிட்ட 200க்கும் அதிகமான படங்களில் நடித்ததுள்ளார். தமிழில் பெரும்பாலான படங்களில் குணச்சித்திர நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார். திரைத்துறையினா் இவரை சுருக்கமாக நீலு என்று அழைப்பது வழக்கம்.
பழம் பெரும் நடிகரான இவருடைய நடிப்பு அந்த கால ரசிகர்களை மட்டும் இன்றி, தற்போதைய ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவை.

7000 நாடகங்கள்

சோ ராமசாமின் நாடா குழுவில் நடித்து வந்த நீலு, ஒய்ஜிமகேந்திரன், கிரேஸி மோகன், எஸ்விசேகர், மவுலி போன்ற பலரின் நாடக குழுவிலும் நடித்திருக்கிறார். அந்தக்கால சிவாஜி, ஜெய்சங்கர் தொடங்கி, இந்தக்கால அஜித், மாதவன், விக்ரம் உள்ளிட்ட நடிகர்களுடன் பணியாற்றி உள்ளார். 
நாடக நடிகராக அறியப்பட்டு, தமிழ் சினிமாவில் நுழைந்த இவர், இதுவரை 7000திற்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார். அதே போல் 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

மரணம்

83 வயதான நீலகண்டன் கடந்த சில மாதங்களாக வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

இறுதிச் சடங்கு

இவரது இறுதிச் சடங்கு சென்னை பெசன்ட் நகரில் உள்ள வீட்டில் இன்று நடைபெறும் என்று தொரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவிற்கு திரைத்துறையினா் பலரும் தங்கள் துக்கம் தெரிவித்து வருகின்றனா்.

Previous Post Next Post