-->

ராஜா ராணி தொடரின் வில்லி நடிகை ஸ்ரீதேவி திருமணம்

ராஜா ராணி வில்லி
ஸ்ரீதேவி
ராஜா ராணி சீரியலில் வில்லியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஸ்ரீதேவி. மேலும் தங்கம், இளவரசி, பிரிவோம், சந்திப்போம், வாணி ராணி என பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீதேவி.
ராஜா ராணி
கதாநாயகியாகவும், வில்லியாகவும் பல தொடர்களில் நடித்தாலும் வில்லி கதாபாத்திரம் தான் இவருக்கு பெரும் பெயரை வாங்கித் தந்தது. தற்போது சின்னத்திரையில் வெளி வறும் நாடகங்களான  கல்யாணப் பரிசு, ராஜா ராணி, உள்ளிட்ட சீரியல்களில் முக்கியமான கதாப்பத்திரங்களில் நடித்து வருகிறார். 
அமைப்பு
மேலும் பெட் அனிமல் துறையிலும் வேலை செய்வதால் தெருக்களில் சாப்பாடு இன்றி சுற்றி திரியும் நாய்களை பாதுகாக்கும் அமைப்பையும் நடத்தி வருகிறார்.
கடந்த 15 வருடங்களாக சின்னத்திரை மற்றும் ஒரு சில படங்களிலும் நடித்த இவர் திருமணம் செய்துக்கொள்ளாமல் காலம் கடத்தி வந்தார். 
ராஜா ராணி நடிகை ஸ்ரீதேவி

திருமணம்
இந்நிலையில் இவரின் திருமணம் தற்போது நடந்துள்ளது. கடந்த ஏப்ரல் 28 தேதி இவருடைய பிறந்த நாள் ஆகும். இந்நிலையில் இவரின் திருமணம் இவரின் பிறந்த நாளான ஏப்ரல் 28 ஆம் தேதி நடந்துள்ளது. இவர் அசோக் சிந்தாரா என்கிற ஐ.டி துறையில் வேலை பார்க்கும் பெங்களூரை சேர்ந்த இளைஞரை கரம் பிடித்துள்ளார்.
வாழ்த்துக்கள்


இவரின் திருமணம் பெற்றோர் விருப்பத்தின்படி நடந்துள்ளது. ஸ்ரீ தேவியின் திருமணத்திற்கு, சின்னத்திரையை சேர்ந்த பல பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் கலந்துக்கொண்டு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். திருமணத்தன்று எடுத்த புகைப்படங்களை தற்போது சமுக வலைதளங்களில் பரவி வருகின்றது.
Previous Post Next Post