-->

கோழி மஞ்சுரியன் - Chicken Manjurian




தேவையான பொருட்கள் : 

1.       கோழிக்கறி - அரை கிலோ
2.       பூண்டு (பொடியாக நறுக்கியது) - 4 டீஸ்பூன்
3.       இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 2 டீஸ்பூன்
4.       வெங்காயம் - 100 கிராம் (நறுக்கியது)
5.       மைதா - 2 டேபிள் ஸ்பூன்
6.       சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
7.       எலுமிச்சம் பழச்சாறு - சிறிதளவு
8.       சர்க்கரை - கால் டீஸ்பூன்
9.       முட்டை - 1
10.   சோயாசாஸ் - இரண்டு டீஸ்பூன்
11.   அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை
12.   மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
13.   உப்பு எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

1. மைதா, சோளமாவு, அடித்த முட்டை, மிளகாய்த் தூள், மிளகுத்தூள், அஜினமோட்டோ, சோயா சாஸ், சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு, போதுமான உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கெட்டியாக கரைத்து வைத்துகொள்ளவும்.

2. ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்ற்றவும்,கோழிக்கறி துண்டுகளை இந்த மாவுக் கலவையில் தோய்த்து, காய்ந்த எண்ணெயில் போட்டு இரு புறமும் நன்றாக வெந்ததும் எடுத்து தனியே வைக்கவும்.

3. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.

4. பொரித்த சிக்கனையும் இதில் சேர்த்துக் கிளறவும்.

5.  குறைந்த தீயில் சில நிமிடங்கள் வைத்திருந்து கோழிக்கறி டிரை ஆனதும் இறக்கி விடவும். சுவையான கோழிக்கறி மஞ்சூரியன் ரெடி.


Previous Post Next Post