-->

புது தொழிலில் இறங்கிய சீரியல் நடிகை ஸ்ரீவித்யா

ஸ்ரீவித்யா சீரியல் நடிகை

ஸ்ரீவித்யா
பிரபல நடிகை ‘தேவயானி’ நடித்த கோலங்கள் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ரீவித்யா. 7 வயது முதலே படங்களில் நடித்து வந்தார் ஸ்ரீவித்யா. இவர் ஒரு எம்.பி.ஏ பட்டதாரி. இவர் சூர்யா நடித்த நந்தா படத்திலும் நடித்திருக்கிறார்.

பிரேக்
பல சீரியல்களில் நடித்த அவர் திருமணத்துக்கு பிறகு சில காலம் நடிப்பிற்கு பிரேக் விட்டார். தற்போது திருமணம், குழந்தை என செட்டிலாகிவிட்டார். சிறு இடைவெளிக்கு பிறகு சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம் நாடகங்களின் மூலம் சின்னத்திரைக்கு ரீ-என்ட்ரி ஆனார். அவரின் கணவர் தனியார் துறையில் வேலை செய்கிறாராம்.

பின் சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம் நடித்த பிறகு மீண்டும் நடிப்புக்கு பிரேக் கொடுத்து விட்டார். இதற்கு காரணம் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற விருப்பமாம்.

பிசினஸ்
இப்போது நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு முழுநேர பிசினசில் இறங்கி விட்டார் சுயமாக ஒரு தொழிலை தொடங்கியுள்ள ஸ்ரீவித்யா இப்போதைக்கு சீரியல் பிளான் இல்லை என்கிறார். சரி என்ன பிசினஸ் தெரியுமா? சமையல் தொழில்தான்.

கிளவுட் கிச்சன்
கிளவுட் கிச்சன்’ என்கிற பெயரில் ஒரு நிறுவனத்தை நடத்துகிறார். இந்த நிறுவனம் சென்னையில் தங்கி வேலை செய்யும் பேச்சிலர்களுக்கு நல்ல சுவையான சாப்பாடு செய்து தரும் நிறுவனம் ஆகும்.

வெளிநாடுகளில் பிரபலம்
மெனுவில் உள்ள உணவை சொன்னால் அவர்களை தேடி அந்த உணவு வருமாம். வெளிநாடுகளில் பிரபலமாக உள்ள இந்த முறையை சென்னையில் நடத்துகிறார் ஸ்ரீவித்யா. புதிதாக ஒரு சீரியல் இயக்கும் ஆசையிலும் இருக்கிறாராம் ஸ்ரீவித்யா.



Previous Post Next Post