ராயபேட்டை மட்டன் பிரியாணி - Rayapettai Mutton Biriyani - Expres Tamil

Header Ads

ராயபேட்டை மட்டன் பிரியாணி - Rayapettai Mutton Biriyani

செட்டிநாடு மட்டன் பிரியாணி

மட்டன் கலவைக்கு :

1. மட்டன் – 400 கிராம்

2. தயிர் – 1 டேபிள்ஸ்பூன்

3. மிளகாய் தூள் ஒரு டேபிள்ஸ்பூன்

4. மல்லி தூள் ஒரு டேபிள்ஸ்பூன்

5. இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

6. உப்பு – 1/2 டீஸ்பூன்

இவை அனைத்தையம் ஒன்றாக கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

தேவையான பொருட்கள் :

1.
பாசுமதி அரிசி – 2 கப் (கால் மணி நேரம் ஊற வைத்து, வடித்துக்கொள்ளவும்)

2.
நெய் – 1 டேபிள்ஸ்பூன்

3.
எண்ணெய் – 6 டேபிள்ஸ்பூன்

4.
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1

5.
நீளவாக்கில் நறுக்கிய தக்காளி – 1

6.
இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன்

7.
மிளகாய் தூள் – 1 டேபிள்ஸ்பூன்

8.
மல்லி தூள் – 1 டேபிள்ஸ்பூன்

9.
கரம் மசாலா – 1 டீஸ்பூன்

10.
தயிர் – 1 டேபிள்ஸ்பூன்

11.
கொத்தமல்லி மற்றும் புதினா ஒரு பிடி

தாளிக்க:

1.
பட்டை – 1

2.
கிராம்பு – 3

3.
அன்னாசிபூ- 1

4.
பிரியாணி இலை – 1

5.
கல்பசி கொஞ்சம்

செய்முறை:

1.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றவும். பட்டை,கிராம்பு,அன்னசிபூ,பிரியாணி இலை,கல்பாசி சேர்த்து தாளிக்கவும்.2. பின் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு, வெங்காயம் போட்டு வதக்கவும்.

3.
மிளகாய், மல்லி, கரம் மசாலா பொருட்களை பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

4. இப்பொழுது கொத்தமல்லி மற்றும் புதினா,தயிர் சேர்க்கவும். எண்ணெய் பிரியும் வரை நன்கு கிளறவும்.


5.  
இப்பொழுது தண்ணீர் ஊற்றவும் இக்கலவையை இரண்டு நிமிடம் கொதிக்கவிடவும்.இப்பொழுது தனியாக ஒரு வானலி வைத்து அதில் எண்ணெய் உற்றவும்.

6. எண்ணெய் சூடான பிறகு
, மட்டன் போட்டு 5 நிமிடம் எண்ணெய் பிரியும் வரை கிளறவும்.பின் மட்டன் சேர்த்து அத்துடன் பாசுமதி அரிசியையும்  சேர்த்து 15 நொடிகள் கிளறி குக்கரில் மூன்று விசில் விட்டு இறக்கினால் சுவையான ராயப்பேட்டை பிரியாணி ரெடி.


No comments