-->

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு எதிராக கொந்தளித்த நடிகர் சத்யராஜ்

ஸ்டெர்லைட் போராட்டம் சத்யராஜ்
சத்யராஜ்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய மக்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டை கண்டித்து சத்யராஜ் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நேற்று 100ஆவது நாளாக நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் போலீஸார் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் 12 பேர் உயிரிழந்துவிட்டனர்.

ரப்பர் குண்டுகள்
இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். போராட்டத்தின்போது ரப்பர் குண்டுகளை பயன்படுத்தாமல் தோட்டாக்களை பயன்படுத்தியது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆழ்ந்த இரங்கல்
இதுகுறித்து நடிகர் சத்யராஜ் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறுகையில் தூத்துக்குடியில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். அதில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

உறவுகளும், சொந்தங்களும்
ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும். எங்கோ வாழும் ஒரு முதலாளி நமக்கு முக்கியமா?. இங்கே வாழும் நம் உறவுகளும், சொந்தங்களும், தமிழக மக்களும் நமக்கு முக்கியமா? என்பதை ஆராய வேண்டும்.

ஆழ்ந்த இரங்கல்

உங்களில் ஒருவனாக, இது எனது நெஞ்சை பதைக்க வைக்கிறது. வேதனைப்படுத்துகிறது. இந்த கொடுமைக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொண்டு இறந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பெண்கள் இறந்திருக்கிறார்கள், மாணவர்கள் உள்பட 10 பேர் இறந்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய இரங்கலை உங்களில் ஒருவனாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று சத்யராஜ் தெரிவித்துள்ளார்.


Previous Post Next Post