-->

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை அமைப்பு

அவிட்டம் நட்சத்திரம் வாழ்க்கை முறை

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்


நட்சத்திரம் : அவிட்டம்
அவிட்டம் நட்சத்திரத்தின் இராசி :
 மகரம் மற்றும் கும்பம்
அவிட்டம் நட்சத்திரத்தின் அதிபதி :
 செவ்வாய்
அவிட்டம் நட்சத்திரம் முதல் மற்றும் இரண்டாம் பாத ராசி அதிபதி (மகரம்)
 : சனி
அவிட்டம் நட்சத்திரம் மூன்று மற்றும் நான்காம் பாத ராசி அதிபதி (கும்பம்) :
 சனி

அவிட்டம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

இவர்கள் சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டவராக இருப்பார்கள். பிரதி பலனை எதிர்பாராமல் உதவும் எண்ணம் கொண்டவர்கள். இவர்கள் ஆரோக்கியத்தை பேணுவதில் மிகுந்த கவனம் செலுத்துவார்கள். மேலும் அதிக எச்சரிக்கை உணர்வு உடையவர்கள். சிக்கனத்தில் அதிக நாட்டம் கொண்டிருப்பார்கள்.

இவர்கள் நேர்மையான தொழில் செய்யாவே விரும்புவர்கள். யாரையும் பார்த்து பயப்படமாட்டார்கள். துணிச்சல் அதிகம் உடையவர்கள். தியாக மனப் பான்மை அதிகம் உடையவர்கள். பெற்றோர்களுக்கும், சகோதர சகோதரிகளுக்கும் செய்ய வேண்டியதை செய்வார்கள். பெற்றோர் மீது அதிக பாசம் மற்றும் அன்பு கொண்டவர்கள்.

அழகான மற்றும் மிடுக்கான தோற்றம் உடையவர்கள். புத்திக்கூர்மை அதிகம் உடையவர்கள். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வார்கள். பிறரின் பொருளுக்கோ, சொத்துக்கோ ஆசை பட மாட்டார்கள். செல்வமும், செல்வாக்கும் உடையவர்கள். மேலும் முன் கோபம் உடையவர்கள். நல்ல மிடுக்கான மற்றும் கம்பீரமான தோற்றம் உடையவர்கள்.

வைராக்கியம் அதிகம் உடையவர்கள், மதியாதார் தலைவாசலை மிதிக்க மாட்டார்கள். சொல்லில் கோபமும், செயலில் நிதானமும் உடையவர்கள்.

மனைவியை அதிகமாக நேசிக்க கூடியவர்கள், அவரின் பேச்சுக்கு மதிப்பளிக்கக் கூடியவர்கள்.
அனுபவ அறிவாளி மற்றவர்களுக்கும் வழி காட்டுவார்கள். பொதுவாக அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தவிட்டு பானையிலும் தங்கம் எடுப்பார்கள்.

அவிட்டம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் ஆடம்பர செலவுகளை கூடிய மட்டும் தவிர்ப்பவர்கள். பசியை தாங்க இயலாதவர்கள். இளகிய மற்றும் லேசான மனம் உடையவர்கள். பலமான மற்றும் கம்பீரமான சரீரம் கொண்டவர்கள். இவர்கள் சொல்லுக்கு செல்வாக்கு இருக்கும். செல்வம் அதிகம் உடையவர்கள்.

அவிட்டம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள்:

இவர்கள் வஞ்சக எண்ணம் உடையவர்கள். காத்திருந்து பழி வாங்க கூடியவர்கள். உண்மையை பேச கூடியவர்கள். சிந்தித்து செயல்படுவது இவர்களின் இயல்பாக இருக்கும். இவர்கள் அதிக விடாமுயற்சி கொண்டவர்கள். பூஜை, மத சடங்குகளில் அதிக நம்பிக்கை உடையவர்கள். பிறருக்கு தானம் கொடுப்பதில் சிறந்தவர்கள்.

அவிட்டம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்:

இவர்களிடம் நல்ல குணங்கள் இயல்பாகவே நிறைந்து இருக்கும். சற்று இளைத்த உடல் அமைப்பு கொண்டவர்கள். திடமான மனதுக்கு சொந்தகாரர்களாக இருப்பார்கள். நம்பிக்கை அதிகம் உடையவர்கள். போராடி வெற்றி பெற கூடியவர்கள்.

அவிட்டம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள்:

அதிர்ஷ்டம் அதிகம் உடையவர்கள். எதையும் ஒருமுறைக்கு பல முறை ஆராய்ந்து செய்யக்கூடியவர்கள். வித்தியாசமான சிந்தனைகளை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். கர்வம் அதிகம் உடையவர்கள். எதையும் தன்நம்பிக்கையுடன் தைரியமாக செய்யக்கூடியவர்கள்.

மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும் 
Previous Post Next Post