சதயம் நட்சத்திரம் வாழ்க்கை முறை

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்


நட்சத்திரம் : சதயம்
சதயம் நட்சத்திரத்தின் ராசி : கும்பம்
சதயம் நட்சத்திரத்தின் அதிபதி
 : ராகு
சதயம் நட்சத்திரத்தின் ராசி அதிபதி :
 சனி

சதயம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் :

இவர்கள் எளிதில் மற்றவர்களை கவரக்கூடியவர்கள். எப்பொழுதும் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க வேண்டும் என விரும்புவார்கள். உடையவர்கள். கொடும் சொற்களை விரும்பாதவர்கள். இவர்கள் மிக எளிதாக கோபமடைவார்கள். எதாவது புதிதாக கற்று கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பார்கள். புத்தகங்கள் வாசிப்பதில் மிகுந்த நாட்டம் கொண்டவர்கள்.

இவர்களுக்கு ஆன்மிகத்தில் அதிக நாட்டம் இருக்கும். எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். இவர்கள் கம்பீரமான தோற்றத்துடன் வசீகரமான உடலமைப்பை கொண்டவர்கள். திட்டமிட்டு காய் நகர்த்துவதில் வல்லவர்கள். ஒரு செய்யலை செய்வதற்கு முன் நான்கு சிந்தித்து செயல்படுவார்கள்.

உடல் வலிமை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். உழைத்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற கொள்கைக் கொண்டவர்கள். அனைவரிடமும் உண்மையாக பழகுவார்கள். தெளிவாக பேசுவார்கள், கேளிக்கை சம்மந்தப்பட்ட விஷயங்களில் நாட்டம் உடையவர்களாக இருப்பார்கள்.

பகைவர்களை அடித்து விரட்டுவார்கள். எந்த பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து தீர்க்கமான முடிவை எடுப்பார்கள். தவறு செய்பவர்களை மன்னிக்கும் சுபாவம் இருந்தாலும் சமயம் பார்த்து தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.

சதயம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் சுத்தமான நன்னடத்தை உடையவர்கள். நல்ல திடமான மனதை உடையவர்கள். தான் விரும்பியதை செய்யகூடியவர்கள். 

சதயம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் :

எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருப்பார்கள். பழிவாங்கும் குணம் அதிகம் கொண்டவர்கள். கடவுள் நம்பிக்கை அதிகம் உடையவர்கள்.

சதயம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் :

செய்யும் காரியங்களை நன்கு திட்டமிட்டு செய்வார்கள். எல்லாவிதமான நற்குணங்களையும் கொண்டு இருப்பார்கள். பசியை தாங்க கூடிய சக்தி இவர்களுக்கு கிடையாது. பிறருக்கு சேவை செய்யும் மனது அதிகம் இருக்கும். சிறந்த கல்வியறிவு கொண்டவர்கள்.

சதயம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் :

தாங்கள் நினைத்ததை சாதிக்கக்கூடியவர்கள். பல நல்ல குணங்களை கொண்டு இருப்பார்கள். எதிலும் அவசரபடாமல் பொறுமையாக செயல்பட கூடியவர்கள். சகல சௌபாக்கியமமும் நிறைந்தவர்கள்.

மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்