-->

இதை படிங்க இனிமே பீட்ரூட் வேண்டான்னு சொல்லவே மாட்டிங்க...

பீட்ரூட்



அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட் இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்ணுகின்றனர். பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.

பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது.பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் நமது உணவுடன் எடுத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.

பீட்ரூட் பலருக்குப் பிடிக்காது, சிலருக்கு மட்டுமே பிடிக்கும். குழந்தைகளில் பலருக்குப் பிடிக்கும். இது பலருக்கும் சுவை சம்பந்தப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. ஆனால் இதில் இருக்கும் மருத்துவ மிக அதிகம்.


பீட்ரூட்டில் கால்சியம், மக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ் போன்ற நிறைய கனிமச்சத்துகள் நிறைந்துள்ளன. இதன் மூலம் நமது உடல் நல்ல ஆரோக்கியம் அடையும்.

பீட்ரூட்டின் மருத்துவ பயன்களும் அதன் தன்மைகளும்


புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும்.ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட். பீட்ரூட் உடலில் உள்ள இரத்த கழிவுகளை நீக்கி உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.


மேலும் கண்களுக்கு பார்வை திறனை அதிகரிக்கிறது.
பீட்ரூட் சாறு செரிமான கோளாறை நீக்கும். இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்க செய்யும்.

பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக்.

பீட்ரூட் முகப்பொலிவை கூட்டும். பீட்ரூட் சிறு நீரக எரிச்சலை குறைக்கிறது.

அல்சர் உள்ளவர்கள் பீட்ரூட் சாறுடன் தேன் கலந்து சாப்பிட குணமாகும்.
பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.


உடல் சோர்வு, மன அழுத்தத்தை குறைத்து உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

பல மாதங்களாக மலச்சிக்கலினால் அவதிப்படுபவர்களுக்கும் மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் அருந்த வேண்டும்.பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.
Previous Post Next Post