-->

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை அமைப்பு

கேட்டை நட்சத்திரம் வாழ்க்கை முறை


கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்


நட்சத்திரம் : கேட்டை
கேட்டை நட்சத்திரத்தின் ராசி : விருச்சிகம்
கேட்டை நட்சத்திரத்தின் அதிபதி : புதன்
கேட்டை நட்சத்திரத்தின் ராசி அதிபதி :
 செவ்வாய்

கேட்டை நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் :

இவர்களுக்கு எதிர்காலத்தில் நடக்க போவதை பற்றி முன் கூட்டியே அறியும் திறன் உடையவர்கள். நட்பு வட்டாரங்கள் நிறைய  இருப்பார்கள். யாருடைய தயவையும் எதிர் பார்க்க மாட்டார்கள். கடவுள் நம்பிக்கை அதிகம் இருக்கும். நல்ல அறிவாளிகள்.

வெகுளியான சுபாவத்தை கொண்டவர்கள். பிறர் தனக்கு செய்த நன்றியை மறக்க மாட்டார்கள். சண்டை வந்தாலும் சமாதானமாகவே போக விரும்புவார்கள். நல்ல நுட்பமான அறிவும், விளையாட்டுத்தனமும் அதிகம் இருக்கும்.

இவர்களிடம் ஒரு காரியத்தை ஒப்படைத்தால் அதை முழு மூச்சாக நின்று முடித்து காட்டுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வார்கள். பொய்யை கூட உண்மையென வாதம் செய்வதில் வல்லவர்கள். யாருக்கும் தீங்கு நினைக்க மாட்டார்கள்.

ஒரு வித பயம், பதற்றம், கோபம் போன்றவை ஏதேனும் ஒரு காரியத்தில் தடை ஏற்பட்டால் இவர்களுக்கு இருக்கும். அறிவுரையை விரும்ப மாட்டார்கள். தனக்கு சரியென பட்டதையே செய்வார்கள். பிடிவாதகாரர்களாக இருப்பார்கள்.

கேட்டை முதல் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்களுக்கு விளையாட்டுதனம் அதிகம் இருக்கும். எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்னும் விருப்பமுடையவர். எப்பொழுதும் எதையாவது யோசித்து கொண்டே இருப்பார்கள். மனதில் உள்ளதை மறைக்காமல் வெளியில் கொட்டி விடுவார்கள். இதனால் எதிரிகளை அதிகம் சம்பாதிப்பார்கள். 

கேட்டை இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் இசையில் அதிக ஆர்வம் உள்ளவர்கள். இவர்களுக்கு வாய் துடுக்கு அதிகம் இருக்கும். கடினமான மனதை கொண்டவர்கள். கோபம் இவர்களின் சுபாவமாக இருக்கும். உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்ள மாட்டார்கள்.

கேட்டை மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உடையவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு கலைகளின் மேல் அதிக ஈர்ப்பு உண்டு. பொதுவாக பரம சாதுவாக இருப்பார்கள்.

கேட்டை நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் :


இவர்கள் ரகசியம் காப்பதில் வல்லவர்கள். சாஸ்திரம், சம்பிரதாயங்களில் ஈடுபாடு உண்டு. நல்ல வலுவான தேக பலத்தை கொண்டு இருப்பார்கள்.

மற்ற ராசிகளின் பொதுவான குணங்களை இங்கே கிளிக் செய்வதன்மூலம் காணலாம்.



மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும் 
Previous Post Next Post