-->

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை அமைப்பு

மூலம் நட்சத்திரம் வாழ்க்கை முறை


மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்


நட்சத்திரம் : மூலம்
மூலம் நட்சத்திரத்தின் ராசி : தனுசு
மூலம் நட்சத்திரத்தின் அதிபதி : கேது
மூலம் நட்சத்திரத்தின் ராசி அதிபதி :
 குரு

மூலம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் :

ஆண் மூலம், அரசாலும், பெண் மூலம் நிர்மூலம் ஆக்கும் என சொல்லுவார்கள். ஆனால் ஏற்கனே சொன்னது போல் இதற்கும் எவ்வித ஆதாரமும் ஜோதிட சாஸ்திரத்தில் இல்லை. இவர்கள் யாருக்கும் அடிபணியாதவர்கள்.

பகவான் ஸ்ரீ ஆஞ்சநேயர் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவராவார். இவர்கள் கம்பீரமான தோற்றத்தை கொண்டவர்கள். ஒழுக சீலர்களாக இருப்பார்கள். எந்த பிரச்சைனையையும் தைரியமாக எதிர் கொள்ளும் திறன் கொண்டவர்கள். தான் என்ற கர்வம் அதிகமிருக்கும்.

இவர்களுக்கு பெற்றோர்களிடம் பாசம் அதிகம் இருக்கும். இவர்களுக்கு ஆடை, அணிகலன்கள் மேல் விருப்பம் அதிகம். மற்றவர்களை கவரும் படி இவர்களுடைய நடவடிக்கைகள் இருக்கும். பிரயாணம் செய்வதில் அதிக விருப்பமுடையவராய் இருப்பார்கள். கொள்கை பிடிப்பு அதிகம் கொண்டவர்கள்.

மூலம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் சுதந்திரமாக இருக்க நினைப்பார்கள். பிடிவாத குணம் இருக்கும். எளிதில் உணர்ச்சி வசப்பட கூடியவர்கள். குடும்பத்தின் மேல் அதிக பாசம் வைத்திருப்பார்கள்.

மூலம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் நல்ல புத்திமான்களாக இருப்பார்கள். எல்லோரிடமும் அன்பாக பழகுவார். கௌரவமாக இருக்க விரும்புவார்கள். கலைகளில் ஆர்வமுடையவர்கள். குடும்பத்தின் மேல் பற்றுள்ளவர்கள்.

மூலம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் எதையாவது புதிதாக கற்று கொண்டே இருக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள். நல்ல பழக்க வழக்கங்களை கொண்டவர். கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவர்கள். எதிலும் போராடி வெற்றி பெற கூடியவர்கள். கொள்கை பிடிப்பு கொண்டவர்கள்.

மூலம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் நல்ல ஆரோக்கியமான உடல் அமைப்பை கொண்டவர்கள். தான் எடுத்து கொண்ட காரியத்தில் கவனமாக இருப்பர். தலைமை தாங்கும் பண்பு கொண்டவர்கள். பிடிவாத குணம் கொண்டவர்கள்.
Previous Post Next Post