-->

ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை அமைப்பு



ரோகினி நட்சத்திரம் வாழ்க்கை முறை



ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்


நட்சத்திரம் : ரோகினி
ரோகினி நட்சத்திரத்தின் ராசி : ரிஷபம்
ரோகினி நட்சத்திரத்தின் அதிபதி : சந்திரன்
ரோகினி நட்சத்திரத்தின் ராசி அதிபதி :
 சுக்கிரன்

ரோகினி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் :

பகவன் ஸ்ரீகிருஷ்ணர் இந்த நட்சத்திரத்தில் தான் பிறந்தார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எல்லா விதமான கலைகளையும் எளிதில் கற்றும் கொள்ள கூடிய ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொன் பொருள் மீது அதிக ஆசையுடைவர்களாக இருப்பார்கள். கூரிய அறிவுடையவர்களாக இருப்பார்கள்.

இவர்களின் பேச்சில் ஒளிவு, மறைவு இருக்காது. இவர்கள் நேர்மையாக வாழ விரும்புவார்கள். எதிர்காலத்துக்கு தேவையான முக்கிய குறிகோளுடன் இருப்பார்கள். வேலையாட்களிடம் வேலை வாங்குவதில் சமர்த்தாய் இருப்பார்கள். மிகவும் சிக்கலான சமயங்களிலும் சாமர்த்தியமாக பேசி சமாளித்து விடுவார்கள். சுத்தத்தை அதிகம் விரும்புவார்கள்.

ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுதந்திரமாக இருக்க ஆசைபடுவார்கள். எல்லா விஷயத்திலும் சுயமாக சிந்தித்து முடிவு செய்வார்கள். இவர்களிடம் தலைமை தாங்கும் பண்பு அதிகம் இருக்கும். இவர்கள் மற்றவர்களை சார்ந்து வாழ்வார்கள். இவர்கள் சோம்பேறித்தனம் அதிகம் உடையவர்கள். ஸ்ரீகிருஷ்ணரின் நட்சத்திரம் ஆதலால், ரோகிணி நட்சத்திரம் தாய்க்கும், தாய்மாமனுக்கும் தோஷத்தை ஏற்படுத்தும் என்பது பொதுவான கருத்தாகும்.

ரோகினி முதல் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்களுக்கு மன உறுதி கொஞ்சம் குறைவு. தோல்வியை தாங்கி கொள்ள முடியாதவர்கள். இவர்கள் நல்ல அழகாக இருப்பார்கள். இவர்களுக்கு பொறுமை குறைவு. இவர்கள் கஞ்சத்தனம் உடையவர்களாக இருப்பார்கள்.

ரோகினி இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் மகிழ்ச்சியாகவும், செல்வ செழிப்புடனும் வாழ விரும்புவார்கள். இவர்களுக்கு தர்மம், மற்றும் இரக்க குணம் அதிகம் இருக்கும். ஆசைப்பட்டது கிடைக்காவிட்டால் துவண்டுவிடுவார்கள். இவர்கள் வாய்சொல்லில் வீரர்களாக இருப்பார்கள். உண்மை பேசுவதை குறிக்கோளாக கொண்டவர். 

ரோகினி மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் கணிதம் சம்மந்தமான வேலைகளில் வல்லவர்கள். சங்கீதத்தில் அதிக ஆர்வம் இருக்கும். சுகமாக இருக்க விரும்புவர். இவர்களிடம் புத்தி கூர்மை அதிகம் இருக்கும்.

ரோகினி நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் உண்மை பேசுவதை விரும்புவர். பிறரின் சொத்துக்கு ஆசைபடுபவர். காமத்தில் அதிக விருப்பம் உடையவர். பொறுமையாக இருந்து எதையும் சாதிக்க விரும்புவார்கள். எளிதில் உணர்ச்சி வசபட கூடியவர்கள்.


மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும் 

மற்ற ராசிகளின் பொதுவான குணங்களை இங்கே கிளிக் செய்வதன்மூலம் காணலாம்.

Previous Post Next Post