-->

தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி - Thalappakatti Chikken Biriyani

சுவையான செட்டிநாடு சிக்கன் பிரியாணி

தேவையான பொருட்கள்
  1. சீரகசம்பா அரிசி - 3 டம்ளர்
  2. சிக்கன் – ½ கிலோ
  3. சின்ன வெங்காயம் - 100 கிராம் (தட்டி வைக்கவும்)
  4. பூண்டு - 100 கிராம் (தட்டி வைக்கவும்)
  5. நெய், எண்ணெய் - தேவையான அளவு
  6. மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
  7. தயிர் - 2 மேசைக்கரண்டி
  8. எலுமிச்சை - ஒரு மூடி
  9. புதினா - 2 கொத்து
  10. கொத்தமல்லித் தழை - 2 கொத்து
மசாலா அரைக்க:
  1. பச்சை மிளகாய் - 5
  2. பட்டை, லவங்கம், ஏலக்காய், ஜாதிபத்திரி, அன்னாசி பூ - தலா 5
  3. இஞ்சி - 150 கிராம்
செய்முறை
  1. சிக்கனை நன்கு சுத்தம் செய்து வைத்துகொள்ளவும்.
  2. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி அரைத்த மசாலா விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. பின் அதில் தட்டி வைத்திருக்கும் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்க்கவும்.
  4. சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து முக்கால் பதம் வேகும் வரை வதக்கவும்.
  5. சிக்கன் வெந்ததும் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. ஒரு கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  7. அரிசியை களைந்து 15 நிமிடம் ஊற வைத்து தண்ணீர் கொதித்ததும் அதில் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.
  8. முக்கால் பதம் வெந்ததும் தயிர், எலுமிச்சை, புதினா, கொத்தமல்லி, நெய் சேர்த்து ஒரு முறை நன்கு கிளறி விட்டு மூடவும்.
  9. தீயின் அளவை மிதமாக வைத்து 15 நிமிடம் தம்மில் வேக விட்டு இறக்கினால் சுவையான தலப்பாக்கட்டி பிரியாணி ரெடி.

Previous Post Next Post