-->

முடக்கத்தான் துவையல் செய்வது எப்படி


முடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்கள்
தேவையான பொருட்கள்
  1. முடக்கத்தான் கீரை - ஒரு கட்டு
  2. புளி - சிறிது
  3. உப்பு - தேவையான அளவு
  4. எண்ணெய் - 2 தேக்கரண்டி
  5. பூண்டு - 10 பல்
  6. காய்ந்த மிளகாய் - 5
  7. இஞ்சி - சிறு துண்டு
  8. சீரகம் - அரை தேக்கரண்டி
  9. மிளகு - அரை தேக்கரண்டி
  10. நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
  11. கடுகு, உளுந்து - ஒரு தேக்கரண்டி
  12. பெருங்காயத் தூள்  – சிறிதளவு 


செய்முறை
  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம்,மிளகு,பூண்டு, காய்ந்த‌ மிளகாய், இஞ்சிசேர்த்து நன்கு வதக்கவும்.
  2. அதனுடன் சுத்தம் செய்த‌ முடக்கத்தான் கீரையை சேர்த்து வதக்கவும்.
  3. நன்கு வதங்கியதும் சிறிதளவு புளி, தேவைக்கேற்ப‌ உப்பு சேர்த்து ஆற‌ வைக்கவும்.
  4. வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து தாளித்து அரைத்த‌ விழுது சேர்த்து பெருங்காய‌ பொடி சேர்த்து நன்கு கிளறவும். தேவைப்பட்டால் இடையிடையே எண்ணெய் சேர்க்கவும்.
  5. எண்ணெய் பிரியும் வரை நன்கு கிளறி இறக்கவும்.
  6. சத்தான‌ முடக்கத்தான் துவையல் ரெடி.

Previous Post Next Post