தேங்காய் பால் மீன் குழம்பு - Thengai Paal Meen Kuzhambu - Expres Tamil

Header Ads

தேங்காய் பால் மீன் குழம்பு - Thengai Paal Meen Kuzhambu

தேங்காய் மீன் குழம்பு
தேவையான பொருட்கள்
 1. மீன் - 1 கிலோ
 2. வெங்காயம் - 2
 3. தக்காளி - 3
 4. தேங்காய் பால் - 2 கப்
 5. குழம்பு பொடி - 4 தேக்கரண்டி
 6. நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
 7. கடுகு - அரை தேக்கரண்டி
 8. வெந்தயம் - அரை தேக்கரண்டி
 9. பச்சை மிளகாய் - 4
 10. பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
 11. புளி தண்ணீர் - 2 கப்
 12. உப்பு – தேவைக்கேற்ப


செய்முறை
 1. மீனை நன்கு சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும்.
 2. வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
 3. பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம் தாளிக்கவும்.
 4. அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
 5. தக்காளி வதங்கியதும், பூண்டு விழுது சேர்த்து வதக்கி, குழம்பு பொடி சேர்க்கவும்..
 6. குழம்பு பொடி சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
 7. பின் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்
 8. குழம்பு கொதித்ததும் மீன் சேர்த்து வேக விடவும்.
 9. மீன் பாதி வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து கொதித்தவுடன் இறக்கினால் சுவையான தேங்காய் பால் மீன் குழம்பு.

No comments