தேவையான பொருட்கள்
 1. உளுத்தம் பருப்பு - 1/4 கிலோ
 2. பனை வெல்லம் - 1/2 கிலோ
 3. ஏலக்காய் - 10
 4. தேங்காய் - 1
 5. சுக்கு - 1/2 அங்குல நீளம்
செய்முறை
 1. உளுத்தம்பருப்பை வாசம் வரும் வரை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
 2. ஆறிய பின் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
 3. தேங்காயை துருவி முதல் பால் 1/4 லிட்டர் அளவும், இரண்டாம் பால் 1/4 லிட்டர் அளவும் எடுக்கவும்.
 4. உளுத்தம்பருப்பை கிரைண்டரில் போட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
 5. கருப்பட்டியை நசுக்கி 1/2 லிட்டர் வெந்நீரில் கரைத்துக்கொள்ளவும்.
 6. சுக்கையும்,ஏலக்காயையும் பொடியாக்கி மாவுடன் சேர்க்கவும்.
 7. கருப்பட்டியை கரைத்த நீரை வடிகட்டி மாவுடன் சேர்த்து கொதிக்க விடவும்.
 8. நன்கு கொதித்து திக்காக வரும் போது ஒரு சிட்டிகை உப்பும், இரண்டாம் தேங்காய்ப்பாலும் சேர்க்கவும்.
 9. 5 நிமிடம் கழித்து முதல் தேங்காய்ப்பாலை ஊற்றி கொதி வராமல் சூடு ஏறியதும் இறக்கவும்.