-->

உங்கள் குழந்தைகள் குடற்புழு பாதிப்பால் அவதிப்படுகிறார்களா ? அப்போ இத கண்டிப்பா படிங்க

நம் குழந்தைகளுக்கு குடற்புழு பாதிப்பு ஏற்படுவதற்கு காரணம் நம்மை சுற்றி உள்ள மாசுபாடு நிரைந்த சூழ்நிலையாகும்.மண் தரையிலும்,அசுத்தமற்ற தண்ணீரில் விளையாடுவதாலும்,தூய்மையற்ற திண்பண்டங்களை வாங்கி உண்பதன் மூலமும் நம் குழந்தைகளுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது.

சுத்தமற்ற இடங்களில் விளையாடி விட்டு அதே அழுக்கு கைகளை வாயில் வைப்பதால் பெருமளவில் பாதிப்பு ஏற்படுகின்றது.இதனால் கை விரல்களில் படிந்திருக்கும் புழுக்களின் முட்டைகள் உணவுக்குழாய் வழியாக வயிற்றை சென்றடைந்து புழுக்கள் முட்டைகளை உருவாக்குகின்றன.

சுற்றுப்புறத்தில் அசுத்தமான மண்தரை மற்றும் குளம், குட்டை, கிணறு, குடிநீர் குழாய் போன்ற நீர்நிலைகளில் ஏராளமான கொக்கிப் புழு, நாடாப் புழு போன்ற கண்ணுக்குத் தெரியாத பல்வேறு புழுக்களின் முட்டைகள் நிறைந்துள்ளன.

இதனால் அடிக்கடி வயிற்றுவலி ஏற்படும். குழந்தைகளின் எடை குறைவதுடன், வாந்தி , மயக்கம் போன்றவை ஏற்படும்.எப்போதும் மந்தமாக காணப்படுவார்கள்.குழந்தையின் மலம் வரும் வழியில் அரிப்பு மற்றும் வலி ஏற்படும்.

குடற்புழுவின் அறிகுறிகள்:

எச்சில் துப்புதல்
உங்கள் குழந்தை அடிக்கடி எச்சில் துப்பத் தொடங்குகிறது என்றால் அது வயிற்றில் குடற்புழு இருப்பதன் அறிகுறியாகும்.வயிற்றில் புழுக்களின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுவதால் வாயில் எச்சில் சுரப்பு அதிகரித்து காணப்படும்.இதனால் குழந்தை அடிக்கடி எச்சல் துப்பச் செய்கிறது.
மலம் கழிக்கும்போது துர்நாற்றம்
மலம் கழிக்கும்போது மிகவும் துர்நாற்றம் வீசுவதாக நீங்கள் உணர்ந்தால் அது குடற்புழு இருப்பதன் காரணமாகத்தான் ஏற்படுகிறது. அவ்வாறு நாற்றம் வீசுவது ஒரு வகையான நோய்த்தொற்றகும்.
அடிவயிற்று வலி
வயிற்றில் குடற்புழு இருந்தால் குழந்தைகளுக்கு அடிக்கடி கடுமையான வயிற்று வலி ஏற்படும்.
ஆசனவாய்சுற்றிஅரிப்பு
பூச்சிகள் ஆசனவாயை அடைந்து அதில் ஒரு வித  எரிச்சல் மற்றும் நமைச்சலை உண்டாக்கும்.குழந்தை சமாளிக்க முடியாத அளவிற்கு சிரமத்தை ஏற்படுத்தும்.இதனால் குழந்தைகள் பல நேரங்களில்  வெறுப்புடனும்,கோபத்துடனும் காணப்படுவார்கள்..
நிம்மதியற்ற தூக்கம்
வயிற்றுவலி, வயிற்று எரிச்சல், அரிப்பு, அமைதியின்மை போன்ற உபாதைகளால் தூக்கம் வராமல் சிரமப்படுவார்கள்.இது வயிற்றில் புழுக்கள் இருப்பதால் ஏற்படுவதாகும்

குடற்புழு உருவாகாமல் தடுக்கும் சில எளிய வழிகள் 

.1. தூய்மை இல்லாத இடத்தில் சரியாக சுத்தகரிக்கபடாத நீரில் சமைக்கப்பட்ட  காய்கறி, கீரைகள், அரைவேக்காட்டில் சமைக்கப்பட்ட இறைச்சி உணவுகள் மூலமாகவும் இவ்வகையான புழுக்கள் வயிற்றில் உருவாக கூடும்.

2. குழந்தைகள் மலம் மற்றும் சிறுநீர் கழித்தவுடன், அதன் உள்ளாடைகளை மாற்றி சுத்தபடுத்துவதன்  மூலம் குடற்புழு வருவதை தடுக்கலாம்.

3. உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் சாப்பிடுவதற்கு முன்பும், கழிவறைக்கு சென்று வந்த பின்னரும் நன்கு கைகளை சுத்தமாக கழுவி பின் உணவு உட்கொள்ளும் பழக்கத்தை பின்பற்றுவதன் மூலம் குடற்புழு பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். உங்கள் குழந்தைகளுக்கும் இந்த பழக்கத்தை பின்பற்றுமாறு அறிவுறுத்துங்கள்.

4. குழந்தையின் நகங்களில் அழுக்கு சேராமல் அடிக்கடி சுத்தம் செய்து நகங்களை வெட்டவும்.

5.  தண்ணீரை தினமும் காய்ச்சி வடிகட்டி குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.காய்கறி, பழங்களை நன்கு கழுவியபின் சாப்பிடுங்கள்.

6 . மீன், இறைச்சி போன்றவற்றை வாங்கி உடனே சமைத்து சாப்பிட்டு விடுங்கள்.அதை குளிர்சாதன பெட்டியில் வைத்து பின் சமைப்பதோ அல்லது சமைத்த இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிடுவதையோ தவிர்த்துடுங்கள்.


இவ்வழிகளை பின்பற்றுவதின் மூலம் குடற்புழு பாதிப்பு வராமல் தடுக்க முடியும்.அத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துவரை அனுகி உரிய சிகிச்சை எடுத்து சரி செய்வதே நல்லது .
Previous Post Next Post