-->

காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் ஆடிபெருக்கின் சிறப்புகள்

ஆடி பெருக்கின் சிறப்புகள்

ஆடிபெருக்கு என்றால் என்ன

ஆடிபெருக்கு என்பது ஆறுகள் பெருக்கெடுத்து ஒடுவதாகும்.அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தில்தான் தென்மேற்குப் பருவ மழை வலுவடைந்து காவிரியின் நீர்ப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும்.அத்தகைய சிறப்பு ஆடி மாதத்தில் நடைபெறுகிறது.எனவே ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ஆடிப்பெருக்கு என்று கொண்டாடுகிறார்கள்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த நல்ல நாளில் மக்கள் வாழை இலையில், பிள்ளையார் பிடித்து வைத்து குங்குமம் மஞ்சள், பழங்கள், பட்டு என  அனைத்தும் வைத்து விளக்கேற்றி, சமைத்த உணவை காக்கைக்கு இட்டு வழிப்பட்டு  வணங்குவார்கள்.

காவிரித் தாய்க்கு நன்றி தெரிவித்தல்  
அனைவரையும் வாழ வைக்கும் அந்தக்காவிரி அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாகவே,"ஆடி பதினெட்டாம் விழா' கொண்டாடப்பட்டு வருகிறது.ஆடி மாதம் பதினெட்டாம் நாள் ஆற்றங்கரையோரம் முழுவதும் உற்சாகக் கோலாகலமாக ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று எல்லோருக்கும் கொண்டாட்டம்தான்.
ஆடிபெருக்கின் சிறப்புகள்

காலையில் எழுந்து குளித்து முடித்து பூ, மஞ்சள், குங்குமம், வளையல், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம் என்று மங்கலப் பொருட்களோடு தன் வயதொத்தவர்களோடு ஆற்றங்கரைக்கு செல்வர்கள் பெண்கள்.
ஆற்றங்கரைக்குப் போவதற்கு முன் படையல் போடுவதற்கு சாதம் தயார் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.‘‘எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் என்று எல்லாவற்றையும் செய்து எடுத்துச் செல்வார்கள்.

பிள்ளைகள் பனைச் சக்கரத்தால் செய்யப்பட்ட சிறிய சப்பரத்தை இழுத்துக்கொண்டு முன்னே போவார்கள். எல்லோருமாக ஆற்றை அடைந்தவுடன் அவரவர் வழிபடுவதற்கு ஏற்ற ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அந்த இடத்தை சாணம் போட்டு மொழுகி சுத்தப்படுத்தி கோலமிட்டு அதில் வாழை இலை விரித்துவைத்து வெற்றிலை வைத்து அதில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைப்பார்கள்.
காவிரித் தாய்க்கு நன்றி தெரிவித்தல்

அதற்கு பூப்போட்டு இலையில் மஞ்சள், குங்குமம், தாலிச்சரடு, காதோலை, கருகமணி, வளையல், பூ, அரிசி, வாழைப்பழம், வெல்லம், பேரிக்காய், ஜாக்கெட் துணி ஆகியவற்றை வைத்து அதற்கு தேங்காய் உடைத்து சூடம் காட்டி வணங்குவார்கள்.

பிறகு அவை எல்லாவற்றையும் ஒரு வாழைப் பட்டையில் வைத்து ஆற்றில் மிதக்க விடுவார்கள். அந்த விளக்கு எரிந்துகொண்டே மற்ற பொருட்களோடு மிதந்து செல்வது காவிரியின் பெருமையை  உலகத்துக்கு உணர்த்துவதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

வயதில் மூத்த பெண்கள் நூல் கயிற்றில் மஞ்சள் தடவி ஆண்களுக்குக் கைகளிலும், பெண்களுக்குக் கழுத்திலும் கட்டிவிடுவார்கள். பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி வாங்குவார்கள்.

பிறகு கொண்டு வந்திருக்கும் பதினெட்டு வகையான பதார்த்தங்களையும், கலப்பு சாதத்தையும் எல்லோருமாக உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு ஆற அமர வீடு திரும்புவார்கள். இவ்வாறு செய்து மக்கள் காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கின்றனர்.
Previous Post Next Post