-->

பெண்கள் உடலில் எந்த இடத்தில மச்சம் இருந்தால் என்ன பலன்

மச்ச பலன்கள் பெண் உடம்பு

உடலில் மச்சம் உள்ள பெண்கள்


வலது கழுத்தில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்களுக்கு தான் பெற்ற பிள்ளைகளால் யோகம் உண்டாகும்.

இடது கழுத்தில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள்.

வலது தோள்களில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் தைரியசாலிகளாக இருப்பார்கள்.

இடது தோள்களில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் குடும்பத்தை சிறப்பாக வழி நடத்துவார்கள்.

இடது மார்பகத்தில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் சொல்வாக்கும், செல்வாக்கும் நிறைந்தவர்களாய் இருப்பார்கள்.

வலது மார்பகத்தில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் நல்ல தூய்மையான எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மார்பகத்தின் மேல் இடதுபுறம் மச்சம் கொண்ட பெண்கள் – இவர்கள் மனமகிழ்ச்சியுடனும், நிம்மதியுடனும் வாழ்க்கையை வாழ்வார்கள்.

மார்பகங்களுக்கு மேலே வலதுபுறம் மச்சம் கொண்ட பெண்கள் – இவர்கள் தான் கொண்ட இலட்சியத்தில் விடாபிடியாக இருந்து சாதிப்பார்கள்.

தொப்புளில் மச்சம் கொண்ட பெண்கள் – இவர்கள் மகிழ்ச்சியான வாழ்கை வாழ்வார்கள்.

தொப்புளுக்கு மேல் மச்சம் கொண்ட பெண்கள் – இவர்களுக்கு யோகமான வாழ்க்கை அமையும்.

தொப்புளுக்கு கீழ் மச்சம் கொண்ட பெண்கள் – இவர்கள் மன அமைதியில்லாமல் வாழ்வார்கள்.

வயிற்றில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் நல்ல குணம் கொண்டவர்களாக வாழ்வார்கள்.

வயிற்றின் இடதுபுறம் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் உண்மை பேசுவதில் விருப்பம் கொண்டவர்கள்.

வயிற்றின் வலதுபுறம் மச்சம் கொண்ட பெண்கள் – இவர்கள் எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் அலட்சியமாக இருப்பார்கள்.

வயிற்றின் மேற்பகுதியில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்களுக்கு எல்லோரிடத்திலும் நல்ல பெயர் இருக்கும்.

அடிவயிற்றில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்களுக்கு நல்ல அம்சமான ராஜயோகம், உயர்பதவிகள் கிடைக்கும்.

முதுகில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் செல்வ செழிப்புடன் வாழ்வார்கள்.

இடுப்பில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்களால் வாழபோகும் வீட்டில் வசதிகள் பெருகும்.

இடுப்பின் இடதுபக்கம் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் பணத்தின் மீது ஆசை கொண்டவர்கள்.

இடுப்பின் வலதுபக்கத்தில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்களுக்கு தெய்வ பக்தி நிறைந்து காணப்படும்.


இவற்றையும் படிக்கலமே,












Previous Post Next Post