-->

வரலக்ஷ்மி விரதத்தின் சிறப்புகளும் அதனால் பெண்களுக்கு உண்டாகும் நன்மைகளும்

திருமண வரம் தரும் வரலக்ஷ்மி விரதம்


வரலக்ஷ்மி விரதம் ஏன் இருக்க வேண்டும்

வரலக்ஷ்மி விரதம் என்பது திருமணமான பெண்கள் தங்களின் கணவர் நீண்ட ஆயுளோடு நலமாக இருக்க வேண்டும் என்பதர்க்காகவும்,திருமணம் ஆகாத கன்னி பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்று மனதார அந்த லக்ஷ்மியை நினைத்து நோன்பு இருப்பதாகும்.
ஒவ்வொரு வருடமும் ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்பாக வரும் வெள்ளிக்கிழமையில் மேற்கொள்ளப்படும் விரதம் வரலட்சுமி விரதம்ஆகும்.

திருப்பாற் கடலை, தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்துக்காக கடைந்தபோது, பல பொருட்கள் கடலுக்குள் இருந்து வெளிப்பட்டன. அவற்றோடு சேர்ந்து ஒரு சாயங்கால நேரத்தில் மகாலட்சுமியும் தோன்றினாள். அவள் தோன்றிய தினம் இது என்று புராண தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரலக்ஷ்மி விரதத்தின் போது செய்ய வேண்டியவை


வரலட்சுமி விரதத்துக்கு முதல் நாள் அன்று வீட்டை சுத்தமாக கழுவி, மஞ்சள் கலந்த தண்ணீரைத் தெளித்து தூய்மையாக வைக்க வேண்டும்.பூஜை அறையில் முதிலில் ஒரு மர பலகையை சுத்தம் செய்து வைத்து மஞ்சள் பூசி குங்குமம் வைத்து கோலமிட்டு பின் அதன் மேல் ஒரு வாழை இலையை வைக்க வேண்டும்.

பின்னர் அந்த இலையின் மீது நெல் அல்லது அரிசியை பரப்பி விட்டு அதன் மீது கலச கும்பத்தை வைக்க வேண்டும்.கலசத்தில் மாவிலை,பூ வைத்து அலங்கரிக்க வேண்டும்.

கலசத்தின் முன்பாக தேங்காய், பழம், கற்கண்டு, உணவு பதார்த்தங்கள், மலர்கள் வைத்து மகாலட்சுமியின் படத்தையும் வைக்க வேண்டும்.
அதைத் தொடர்ந்து நோன்பு கயிற்றைக் கும்பத்தோடு வைத்து, ‘என் வீட்டுக்கு வந்திருக்கும் வரலட்சுமி தாயே! எப்போதும் திருமண வாழ்வு சிறப்புற்றிருக்க வரம் கொடு அன்னையே!என்று கூறி வேண்டியபடி நெய் விளக்கு தீபத்தை ஏற்றி மகாலக்ஷ்மியை வரவேற்க வேண்டும்.

பூஜைகள் நிறைவடைந்தவுடன், நோன்பு கயிற்றை எடுத்து கன்னிப் பெண்களின் கைகளில், சுமங்கலிப் பெண்கள் கட்டிவிட வேண்டும்.சுமங்கலிப் பெண்களின் கழுத்தில் சுமங்கலிப் பெண்களே நோன்பு கயிற்றைக் கட்ட வேண்டும். தொடர்ந்து வரலட்சுமி நோன்பு பூஜையில் கலந்துகொண்ட பெண்களுக்கு மங்கலப் பொருட்களான மலர்ச்சரம், மஞ்சள், குங்குமம் போன்றவற்றை கொடுத்து, அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்த வேண்டும்.

வரலட்சுமி நோன்பை நடத்தும்போது, அக்கம் பக்கத்தில் இருக்கும் கன்னிப் பெண்கள், சுமங்கலிப் பெண்களை அந்த விரத பூஜையில் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுக்க வேண்டும். வரலட்சுமி நோன்பு விரதத்தை நடத்துபவருக்கு எவ்வளவு சிறப்புகள் கிடைக்குமோ, அதேபோல் அதில் கலந்து கொள்பவர் களுக்கும் சிறப்பு வந்து சேரும்.

இந்த விரதத்தை ஒவ்வொரு ஆண்டும் தவறாது அனுஷ்டித்து வந்தால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணமும், திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
Previous Post Next Post