அருகம்புல் துவையல் 

வாய்வு தொல்லையை சரி செய்யும் அருகம்புல் துவையல்


தேவையான பொருட்கள்

 1. சுத்தமான அருகம்புல் – 2 கைப்பிடி அளவு
 2. கருப்பு உளுந்து – 2 ஸ்பூன்
 3. தக்காளி – 1
 4. வெங்காயம் – 1
 5. பூண்டு – 5 பல்
 6. இஞ்சி – 1 துண்டு
 7. புளி – சிறிதளவு
 8. காய்ந்த மிளகாய் – 3
 9. எண்ணெய் – தேவையான அளவு
 10. உப்பு – தேவையான அளவு

செய்முறை

 1. முதிலில் அருகம்புல்லை சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும்.
 2. பின்னர் ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.
 3. எண்ணெய் காய்ந்தவுடன் கருப்பு உளுந்தை சேர்த்து வறுத்து தனியாக  எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 4. பின் அதே கடாயில் வெங்காயம்,தக்காளி,பூண்டு,இஞ்சி,காய்ந்த மிளகாய்,புளி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
 5. பின் இதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
 6. வதக்கிய பொருட்களை சிறிது நேரம் ஆற வைக்கவும்.
 7. பின்னர் இவை அனைத்தையும் ஒன்றாக மிக்ஸி அல்லது அம்மியில் அரைத்து எடுத்து பரிமாறினால் சுவையான அருகம்புல் துவையல் ரெடி.