-->

வாத்துக் கறி கிரேவி - Vaththu Kari Grevy

வாத்து குழம்பு

தேவையான பொருட்கள்


  1. வாத்துக்கறி -1/2 கிலோ
  2. தக்காளி - 2
  3. பெரிய வெங்காயம் - 3
  4. பச்சை மிளகாய்  - 4
  5. இஞ்சி பூண்டு விழுது - 2  ஸ்பூன்
  6. தேங்காய் துருவல் - ¼  கப்
  7. சோம்பு - 1 ஸ்பூன்
  8. எண்ணெய் - தேவையான அளவு 
  9. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  10. மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
  11. உப்பு - தேவையான அளவு 
  12. பட்டை - 2
  13. கிராம்பு - 2
  14. மிளகு - 5
  15. சீரகம் -  ஸ்பூன்
  16. கொத்தமல்லித் தழை - சிறிதளவு

செய்முறை

  1.  முதலில் வாத்தை கழுவி சுத்தம் செய்து  கிரேவி செய்வதற்கு ஏற்றார்போல் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  2. வெங்காயம், தக்காளி,பச்சை மிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும். அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.
  3. மிக்ஸியில் தேங்காய் துருவலுடன், சோம்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.மிளகாய் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
  4.  பின் ஒரு குக்கரில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு தாளித்துக் கொள்ளவும்.
  5. பின்  நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  7. அதனுடன் பொடி செய்த மிளகு, சீரகம் மற்றும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து வதக்கவும்.
  8. வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, கிரேவி போல் வரும் வரை நன்கு கிளறி விடவும்.
  9. கிரேவி பதத்திற்கு வந்த பிறகு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துள்ள  வாத்துக் கறியை சேர்த்து நன்கு பிரட்டிவிடவும்.
  10. பின்னர் கறிக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
  11. கறி நன்கு வெந்து கிரேவி பதத்திற்கு வந்ததும் இறக்கி கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான வாத்துக் கறி கிரேவி ரெடி.

Previous Post Next Post