-->

வாத்துக்கறி குழம்பு - Vaththu Kari Kuzhambu

வாத்துக் குழம்பு வகைகள்


தேவையான பொருட்கள்

  1. வாத்துக்கறி – ½ கிலோ
  2. வெங்காயம் - 2
  3. தக்காளி - 2
  4. பச்சை மிளகாய் - 6
  5. மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
  6. இஞ்சி பூண்டு விழுது - 5 ஸ்பூன்
  7. பிரியாணி இலை -  2
  8. மஞ்சள்தூள் -1/4 ஸ்பூன்
  9. உப்பு – தேவையான அளவு
  10. எண்ணெய் –தேவையான அளவு  

அரைக்க தேவையான பொருட்கள்

  1. தேங்காய் துருவல் – ¼ கப்
  2. சீரகம் - 1 ஸ்பூன்
  3. வெங்காயம் - 4
  4. கறிவேப்பிலை – சிறிதளவு
  5. காய்ந்த மிளகாய் - 3
  6. மல்லித் தூள் – ½ ஸ்பூன்
  7. தக்காளி - 1
  8. பட்டை – 1
  9. கிராம்பு - 2
  10. சோம்பு – ½ ஸ்பூன்

செய்முறை

  1. முதலில் வாத்துக் கறியை சுத்தம் செய்து கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
  2. பின் வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
  3. பின் பத்திரத்தில் எண்ணெய் ஊற்றி  தேங்காய் துருவலை பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
  4. வதக்கிய தேங்காய், சோம்பு, பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், தக்காளி, வெங்காயம், மல்லித்தூள், சீரகம் ஆகிய அனைத்தையும் நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  5. பின்னர் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பிரியாணி இலையைப் போட்டு தாளித்து அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  6. பின்  வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  7. அத்துடன் மிளகுத்தூள் சேர்த்து வதக்கி விடவும்.
  8. நன்கு வதங்கிய பிறகு வாத்துக்கறியை போட்டு நன்கு வதக்கவும்.
  9. கறி வதங்கியவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
  10. கறி வெந்து குழும்பு சுண்டி வரும்போது அரைத்த வைத்துள்ள தேங்காய் விழுதைப் சேர்த்து கொதிக்க விடவும்.
  11. நன்கு கொதித்து குழும்பு பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான வாத்துக்கறி குழம்பு ரெடி.

Previous Post Next Post