-->

புதினாவின் மருத்துவ குணங்களும் அதன் பயன்களும்

புதினா நன்மைகள்

புதினாவின் மருத்துவ குணங்கள் 

புதினா ஒரு மருத்துவ மூலிகையாகும்.ஆனால் நாம் அதனை உணவின் வாசனைக்காக மட்டும் பயன்படுத்தி வருகிறோம். புதினாவில் வயல் புதினா, காரன் புதினா, ஜப்பானிய புதினா, கோசி, பேப்பர் மின்ட் என பல வகையான புதினாக்கள் உள்ளன

 நம் பெரியோர்கள் தங்களுக்கு வரும் நோய்களை சரி செய்ய நாம் உண்ணும் உணவு பொருட்களையே மருந்தாக பயன்படுத்தி வந்தார்கள். அதில் புதினாவும் மிக முக்கியமான மருந்தாகும்.

புதினாவில் நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து விட்டமின்களும் நிறைந்துள்ளன.புதினா ஜீரண சக்தியை அதிகரித்து பசியை தூண்டுகிறது.

புதினாவில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, ஆகிய அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன.

புதினாவை நம் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் நம் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைய செய்கிறது.வயிற்று போக்கு பாதிப்பு உள்ளவர்கள் புதினா துவையலை வடித்த சாதத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று போக்கு நின்று விடும்.

அசைவ உணவு மற்றும் கொழுப்பு நிறைந்த பொருட்களை சாப்பிடுவதால் உண்டாகும் அஜீரணத்தை சரி செய்ய புதினா உதவுகிறது.நம் உடலில் உள்ள இரத்தத்தை சுத்திகரிக்கவும் புதினா பயன்படுகிறது.

மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் உணவில் புதினாவை சேர்த்துக் கொள்வதின் மூலம் மலச்சிக்கலை சரி செய்யலாம்.

மூட்டு வலி பாதிப்பு உள்ளவர்கள் புதினா இலைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு குறைந்த அளவு தீயில், நீர் சேர்க்காமல் வதக்கி எடுத்து உடலில் வலி, குடைச்சல் இருக்கும் பாகங்களில் ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி குறையும்.

புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை ஒன்றாக கலந்து தலை முடியில் தடவி ஊற வைத்து பின் சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகு மறைந்து கூந்தலும் பட்டுபோல் பளபளக்கும்.

 புதினா நம் உணவில் வாசனை பொருளாக மட்டும் இல்லாமல் சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது

.
Previous Post Next Post