-->

வாத்து பிரியாணி - Vaththu Biriyani

வாத்து பிரியாணி செய்முறை

தேவையான பொருட்கள்:
  1. வாத்துக் கறி – ½ கிலோ 
  2. பாஸ்மதி அரிசி -  ½ கிலோ  
  3. வெங்காயம் - 3
  4. தக்காளி - 3
  5. புதினா - 1 கட்டு 
  6. கொத்தமல்லி – சிறிதளவு 
  7. மிளகாய் தூள் -1 ஸ்பூன் 
  8. மஞ்சள் தூள் -1 ஸ்பூன் 
  9. புளித்த தயிர்  - சிறிதளவு  
  10. தேங்காய் பால்  - 2 கப் 
  11. வறுத்த முந்திரி 20
  12. தண்ணீர் – தேவையான அளவு  
  13. பிரியாணி இலை - 2
  14. எண்ணெய் – தேவையான அளவு 
  15. வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
  16. எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் 
மசாலாவிற்கு
  1. பச்சை மிளகாய் -
  2. இஞ்சி பூண்டு விழுது - 4 டீஸ்பூன்
  3. பட்டை -
  4. ஏலக்காய் -
  5. கிராம்பு -
  6. தண்ணீர் – தேவையான அளவு 
செய்முறை
  1. முதலில் வாத்துக் கறியை நன்றாக சுத்தம் செய்து கழுவி நீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்.
  2. பாஸ்மதி அரிசியை 20 நிமிடம் ஊறவைத்துக் கொள்ளவும்.
  3. பின் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, பட்டை, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  4. பின்பு சுத்தம் செய்து வைத்துள்ள வாத்துக் கறியுடன் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதினை சேர்க்கவும்.
  5. கறியுடன் மசாலாவை நன்கு கலந்தவுடன் புதினா மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி, ஊற வைக்கவும்.. 
  6. பின்னர் ஒரு  குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பிரியாணி இலை மற்றும் வெங்காயம்,தக்காளி சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
  7.  நன்கு வதங்கிய பின் மசாலா சேர்த்து  ஊற வைத்துள்ள வாத்துக் கறி துண்டுகளை போட்டு வதக்கவும். 
  8. அதன் பிறகு அதனுடன்  புளித்த தயிர், மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து விட வேண்டும்.
  9.  பின்பு குக்கரை சிறிது நேரம் மூடி வைத்து, மிதமான தீயில் வைத்து வேக விடவும்.
  10.  பின்பு தேங்காய் பாலை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, தீயை அதிகரித்து, நன்கு கொதிக்க விட வேண்டும். 
  11.  கலவையானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரிசியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதனுடன் வெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் போட்டு குக்கரை மூடி, 2 விசில் விடவும்.
  12. நன்கு வெந்தவுடன் இறக்கி, அதன் மேல் கொத்தமல்லி தழை, முந்திரி,  எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறினால் சுவையான வாத்து  பிரியாணி ரெடி.

Previous Post Next Post