-->

சித்தரத்தையின் மருத்துவ பயன்களும் அதனால் உண்டாகும் நன்மைகளும்


எலும்புகள் பலம் பெற உதவும் சித்தரத்தை

மருத்துவ குணம் நிறைந்த சித்தரத்தை 

சித்தரத்தை என்ற அழகான பெயரை கொண்ட இந்த தாவரம் இஞ்சி குடும்பத்தை சேர்ந்தது. கிழக்காசிய நாடுகளில் இதனை சீன இஞ்சிஎன்று அழைக்கிறார்கள். இது காரத் தன்மை கொண்டது.

அரத்தை அறுக்காத கபத்தை யார் அறுப்பார்?’ என்ற சொல்வழக்கு ஒன்று உண்டு. அந்த அளவுக்கு தொண்டையில் சேரும் சளி,கபத்தை வெளியேற்றும் சக்தி சித்தரத்தைக்கு இருக்கிறது.

சாதாரண ஜுரம் மற்றும் சுவாச பாதிப்புகள் விலக, சில துண்டுகள் சித்தரத்தையை தூளாக்கி அத்துடன் அதே அளவு பனங்கற்கண்டை தூளாக்கி இவற்றை ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, அதில் சிறிதளவு தினமும் பாலில் கலந்து பருகிவர, ஜுரம் மற்றும் சுவாச பாதிப்புகள் யாவும் சரியாகிவிடும்.

குழந்தைகள் இருக்கும் வீடுகளில் சித்தரத்தையை கட்டாயம் வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும். அவைகளுக்கு சளி, இருமல் ஏற்படும்போது, சிறிதளவு சித்தரத்தையை தூளாக்கி, அரை தேக்கரண்டி தேனில் குழைத்து கொடுக்கவேண்டும்.

வாயு கோளாறு, இருமல், தலைவலி, காய்ச்சல், வாந்தி, சுவாச கோளாறுகளுக்கு இது நல்ல மருந்து. மேற்கண்ட பாதிப்பு கொண்டவர்கள் 10 கிராம் சித்தரத்தையை நன்கு இடித்து 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பருகவேண்டும். இதற்கு வலியை நீக்கும்தன்மையும் உண்டு.

எலும்புகள் பலம் பெற நன்கு உலர்ந்த சித்தரத்தை மற்றும் அமுக்கிரா கிழங்கை எடுத்து இடித்து தூளாக்கிக்கொண்டு, இந்தப்பொடியை சிறிது தேனில் குழைத்து தினமும் இருவேளை என  நாற்பத்தெட்டு நாட்கள் சாப்பிட்டு வர, வலி குறைந்து நல்ல பலன் அளிக்கும்.

சிறு துண்டுகளாக வெட்டிய ஒன்றிரண்டு சித்தரத்தையை, மூன்று டம்ளர் தண்ணீரில் இட்டு கொதிக்கவைத்து, தண்ணீர் மூன்றில் ஒரு பங்காக சுண்டிவரும் வேளையில், நீரை எடுத்து வைத்துக் கொண்டு, தினமும் இருவேளை, சில நாட்கள் தொடர்ந்து பருகிவர, இருமல் .தொண்டை கரகரப்பு நீங்கி நல்ல நிவராணம் அளிக்கும்.

குழந்தைகளை குளிக்கவைத்து தலைதுவட்டிய பின்பு, சிறிதளவு சித்தரத்தை தூளை அவற்றின் தலை உச்சியில் தேய்த்தால் சளி பிடிக்காது.
சித்தரத்தை தூளை, தேனில் கலந்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர, தொண்டை புண் ,தொண்டை வலி ,இருமல் போன்றவை விரைவில் குணமாகும்.


குழந்தைகளின் மாந்தம் ஏற்படும் இளைப்பு சளி போன்ற பாதிப்புகள் விலக.உலர்ந்த சித்தரத்தை துண்டை விளக்கெண்ணையில் தோய்த்து நெருப்பில் இட்டு கரியாக்கி, அதை தேனில் தேய்க்க உண்டாகும் தேன் கலந்த தூளை, கைக்குழந்தைகளுக்கு நாக்கில் தடவ, விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
Previous Post Next Post