-->

ஜீரண சக்தியை அதிகரிக்கும் இஞ்சி தொக்கு



அஜீரண கோளாறை சரி செய்யும் இஞ்சி

இஞ்சி தொக்கை சாதத்துடன் கலந்து அதில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டு வர சளி,பித்தம்,அஜீரணம் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இஞ்சி தொக்கு தயிர் சாதத்துடன் சேர்ந்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.


 தேவையான பொருட்கள் 

  1. இஞ்சி - 100 கிராம்
  2. புளி - எலுமிச்சை அளவு
  3. வெல்லம் - சிறிதளவு 
  4. தனி மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி
  5. மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
  6. தனியா - சிறிதளவு 
  7. உப்பு - தேவையான அளவு 
  8. கடுகு - 1 ஸ்பூன் 
  9. வெந்தயம் - 1/2 ஸ்பூன் 

தாளிக்க 
  1. கடுகு - 1 ஸ்பூன் 
  2. சீரகம் - 1 ஸ்பூன் 
  3. நல்லெண்ணெய் - 2 ஸ்பூன் 
  4. பெருங்காயம் - 1 சிட்டிகை 

செய்முறை 

  1. இஞ்சியை தோல் நீக்கி துருவி எடுத்துக்  கொள்ளவும். 
  2. பின் புளியை கெட்டியாக கரைத்துவடிகட்டி எடுத்துக்  கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் சிறிதளவு கடுகு, தனியா, சீரகம், வெந்தயத்தை சேர்த்து நன்கு சிவக்க வறுத்து, ஆற வைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
  4. பின்னர் நல்லெண்ணெயில் கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து துருவி வைத்துள்ள இஞ்சியையும்  சேர்த்து வதக்கவும்.
  5. இஞ்சி நன்கு வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்க்கவும்.
  6. பின்  உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
  7. நன்கு சுண்டி, எண்ணெய் மேலே வரும் போது பொடி செய்து வைத்துள்ள வைத்துள்ள பொடி, மேலும் சிறிது பெருங்காயம் சேர்த்து கிளறவும்.
  8. அத்துடன் ஒரு துண்டு வெல்லம் சேர்த்து நன்கு கிளறி தொக்கு பதத்திற்கு வந்ததும் இறக்கி ஆற வைத்து பரிமாறினால் சுவையானஇஞ்சி தொக்கு ரெடி.


Previous Post Next Post