எந்த பூ கனவில் வந்தால் என்ன பலன்

பூக்களை கனவில் கண்டால்

 1. மல்லிகை பூவை கனவில் கண்டால் மிகவும் நல்லது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க போகிறது என்று அர்த்தம்.
 2. வெண் தாமரை / வெள்ளை தாமரையை கனவில் கண்டால் சரஸ்வதி தேவியின் பரிபூரண அருள் கிடைக்கும். கல்வியில் உயர்வான நிலையை அடைவீர்கள்.
 3. ரோஜா பூவை கனவில் கண்டால் நீங்கள் செய்த செயலுக்கு பாராட்டுகள் குவியும். மேலும் அனைத்து விதத்திலும் நன்மை உண்டாகும்.
 4. முல்லை பூவை கனவில் கண்டால் அம்மா வழியில் தேவையான உதவிகள் கிடைக்கும்.
 5. பன்னீர் பூவை கனவில் கண்டால் வெளியூர் அல்லது வெளி நாடுகளில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும்.
 6. பவளமல்லி பூவை கனவில் கண்டால் தந்தை வழி உறவுகளால் நன்மை ஏற்படும் என்று அர்த்தம்.
 7. சாமந்தி பூவை கனவில் கண்டால் குடும்பத்தில் சுப நிகழ்சிகள் நடக்க போகிறது என்று அர்த்தம்.
 8. வாடாமல்லி பூவை கனவில் கண்டால் உறவினர்களால் உதவி கிடைக்கும் என்று பொருள்.
 9. அல்லி பூவை கனவில் கண்டால் மனைவி வழி உறவினர்களால் நன்மை ஏற்படும் என்று அர்த்தம்.
 10. செடியில் இருந்து பூக்களை பறிப்பது போல கனவு கண்டால், நல்ல பலன்கள் கிடைக்கும். நிலம் வீடு, நகை வாங்கும் யோகம் ஏற்படும்.
 11. பூவை கனவில் காண்பது பொதுவாக நன்மை உண்டாகும் என்று அர்த்தம்.
 12. மஞ்சள் நிற பூக்களை கனவில் காண, மங்கள நிகழ்ச்சிகள் நடக்கும் என்று பொருள்.
 13. தாமரை, வெள்ளைப் பூக்கள், பூமாலை, இவைகளைப் மற்றவர்களிடம் இருந்து பெறுவதாகக் கண்டால் பெரும் புகழ் வந்து சேரும்.

இவற்றையும் படிக்கலாமே