-->

செரிமானத்தை ஊக்குவிக்கும் பப்பாளி பாயாசம் செய்வது எப்படி ?

.
காய்ச்சலை குணபடுத்தும் பப்பாளி

பப்பாளி வயிற்றுக் கோளாறுக்கு மருந்தாகப் பயன்படுகிறதுசெரிமானத்தை ஊக்குவிக்கிறதுபப்பாளிக் காயின் பால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றுகிறது.பப்பாளி இலை காய்ச்சலை குணபடுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது.

தேவையான பொருட்கள்
  1. பப்பாளி பழம் – 1 கப்
  2. தேங்காய் பால் – 1 கப்
  3. வெல்லம் – 50 கிராம்
  4. முந்திரிப்பருப்பு – சிறிதளவு
  5. கிஸ்மிஸ் பழம் – சிறிதளவு
  6. ஏலக்காய் பொடி – சிறிதளவு

செய்முறை
  1. நன்கு பழுத்த பப்பாளி பழமாக வாங்கி அதை தோல் சீவி விதைகளை எடுத்து சிறிய துண்டுகளாகநறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் நறுக்கி வைத்த துண்டுகளை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  3. அரைத்த கலவையுடன் தேங்காய் பால் வெல்லம்  சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  4. பின் அதில் முந்திரிப்பருப்புகிஸ்மிஸ் பழம் சேர்த்து ஏலக்காய் பொடி தூவினால் சுவையான பப்பாளி பாயாசம் ரெடி. 

Previous Post Next Post