ஆத்தூர் மட்டன் மிளகு கறி - Aathur Mutton Milagu Kari - Expres Tamil

Header Ads

ஆத்தூர் மட்டன் மிளகு கறி - Aathur Mutton Milagu Kari

ருசியான மட்டன் கிரேவி

அசைவ உணவுகளிலேயே மட்டன் எனும் ஆட்டிறைச்சி தான் மிகவும் ஆரோக்கியமானது. மேலும் மட்டன் மக்களால் அதிகம்  சாப்பிடப்படும் உணவுப் பொருளாகும். மட்டன் சாப்பிடுவதால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை குணப்படுத்தலாம். குறிப்பாக கருத்தரிப்பதில் பிரச்சனை இருப்பவர்கள், விறைப்புத்தன்னை குறைபாடு உள்ளவர்கள் மட்டன் சாப்பிடுவது மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள்
 1. மட்டன் – அரை கிலோ
 2. வெங்காயம் – 2
 3. தக்காளி – 2
 4. மஞ்சள் தூள்  1/2  ஸ்பூன்
 5. சின்ன வெங்காயம் – 100 கிராம்
 6. இஞ்சி பூண்டு விழுது – 1/2  ஸ்பூன்
 7. எண்ணெய் – தேவையான அளவு
 8.  உப்பு தேவையான அளவு
மசாலாவுக்கு
 1.  மிளகு  1 ஸ்பூன்
 2. சீரகம்  1 ஸ்பூன்
 3. சோம்பு  1/2  ஸ்பூன்
 4. வரமிளகாய் – 4
 5. மல்லித்தூள்– 1 ஸ்பூன்
 6. பட்டை – 1
 7. கிராம்பு – 2
 8. முந்திரி  ஐந்து
 9. ஏலக்காய்  3
 10. தேங்காய்  ஒரு மூடி
 11. இஞ்சி     1 சிறிய துண்டு
 12. பூண்டு   5 பல்

செய்முறை
 1. மட்டனை நன்கு சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும்.
 2. முதலில் மசாலாவுக்கு உரிய மிளகு, சீரகம், சோம்பு, வரமிளகாய், மல்லித்தூள், பட்டை, கிராம்பு, முந்திரி, ஏலக்காய், தேங்காய், இஞ்சி, பூண்டு என அனைத்தையும் சிறிது தண்ணீர்சேர்த்து நன்கு நைசாக அரைத்து கெள்ளவும். 
 3. ஒரு பாத்திரத்தில் மட்டன், மஞ்சள் தூள்உப்பு ,வெங்காயம்மற்றும் தக்காளியை போட்டு நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
 4. அதனுடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து நன்கு கிளறவும். 
 5. கலந்து வைத்த மட்டன் கலவையை 10-15 நிமிடம் ஊறவைக்கவும்
 6.  ஒரு கனமான வாணலியில் எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும்சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது இரண்டையும் நன்கு வதக்கி அதனுடன் ஊற வைத்த மட்டன் கலவையையும் சேர்த்து சிறிது நேரம் நன்கு வதக்கவும்.
 7. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேகவைத்து சிறிது புதினா கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான ஆத்தூர் மட்டன் மிளகு கறி ரெடி. 
      மேலும் பல்வேறு மட்டன் உணவு வகைகளை காண click  செய்யவும். 

No comments