-->

மார்கழி மாத வழிபாடும் அதன் சிறப்புகளும்


மார்கழி மாதத்தின் மகிமை 

மார்கழி மாதம் என்றவுடன் அனைவருக்கும் நினைவில் வருவது அதிகாலை பனியும்,அழகிய கோலமிடும் அழகு பெண்களும்,பஜனை பாடல்களும் தான்.

மார்கழி மாதத்தை பீடை மாதம்என்று சிலர் சொல்வதுண்டு அது வெறும் மூடநம்பிக்கை. மார்கழி மாதம் செல்வம் தரும் மாதமாகும்.மார்கழி மாதம் முழுவதுமே கடவுளை வழிபடும் மாதமாக நமது மரபில் அனுசரிக்கப்படுகிறது.
மார்கழி மாத பஜனைகள்

மாதங்களில் மிகவும் உயர்ந்தது மார்கழி என்பார்கள். அதனால்தான், ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்!என்று ஸ்ரீகிருஷ்ணனே கூறியிருக்கிறார். மேலும் அவரே, கீதையில் "மார்கழி மாதத்தை தேவர்களின் மாதம்" என்று சொல்கிறார்.

மார்கழி மாதம் முப்பது நாட்களும் பாவை விரதம் இருந்து ஆண்டாள் அந்த பெருமாளையே மணாளனாகக் கொண்டது சிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்தில் தான்.

தெய்வ வழிபாட்டுக்கு இடையூறு வந்துவிடக் கூடாது என்பதாலேயே மார்கழி மாதத்தில் மற்ற நிகழ்ச்சிகள் எதுவும் வைத்துக் கொள்வதில்லை. திறக்காத  திருக்கோயில்களும் திறந்திருக்கும் ஒரே மாதம் மார்கழி மாதம்.

மார்கழி மாதம் மிகவும் மகத்துவம் நிறைந்த மாதமாகும்.வருடம் முழுவதும் கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள், மார்கழி மாதம் மட்டும் கோவிலுக்கு சென்றாலே போதும்.வருடம் முழுதும் கோவிலுக்கு சென்ற பலன் கிடைத்துவிடும்.

மார்கழி மாதத்தில் கோலத்தில் பூ வைப்பது ஏன் ?


ந்த காலத்தில்  திருமணத் தரகர்களோ, மாப்பிள்ளை - பெண் தேவை என்பதற்காக வெளியிடப்படும் கல்யாண விளம்பரங்களோ கிடையாது. எந்த வீட்டில் பெண் அல்லது பிள்ளை திருமணத்துக்குத் தயாராக இருக்கிறார்களோ, அந்த வீட்டின் வாயிலில் மட்டும் கோலத்தின் மேல் பூசணிப் பூ வைப்பார்கள். ஒட்டு மொத்தமாக எல்லா வீடுகளிலும் வைக்க மாட்டார்கள்.

மார்கழி மாத அதிகாலையில் வீதி பஜனையில் வருபவர்களின் பார்வையில் இந்தப் பூக்கள் தென்படும். விவரத்தைப் புரிந்து கொண்டு தை மாதம் பிறந்த உடனே பேசி, கல்யாணத்தை முடிப்பார்கள். இதன் காரணமாகவே மார்கழி மாதத்தில் வீட்டு வாயிலில் இருக்கும் கோலத்தில் பூக்களை வைத்தார்கள்.

மார்கழி மாதத்தில் செய்ய வேண்டியவை

  1. மார்கழி அதிகாலையிலேயே எழுந்து விடவேண்டும்.
  2. வீட்டை சுத்தம் செய்து, குளித்து, கோலமிட்டு, திருப்பாவை, திருவெண்பாவை பாடல்களைப் பாட வேண்டும்.
  3. மார்கழி மாதம் விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்பு உண்டாகும்.
  4. மார்கழி மாதம் முழுவதும் பெண்கள் அதிகாலையில் எழுந்து வீட்டு வாசலில் அழகான வண்ணக் கோலங்கள் போட வேண்டும்.
  5. ஆண்டாள், பெருமாள் படம் வைத்து உதிரிப்பூ தூவி காலையும், மாலையும் வழிபட வேண்டும். 
  6. அதிகாலையில் எழுந்து விளக்கேற்றி இறைவனை வழிபட மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். 

மார்கழி மாதத்தில் செய்யக்கூடாதவை

  1. மார்கழி மாதத்தில் விதை விதைக்க கூடாது. ஏனெனில் விதைகள் சரியாக முளைக்காது. 
  2. மார்கழி மாதத்தில் திருமணம் செய்யக்கூடாது. 
  3. மார்கழி மாதம் விரதம் மேற்கொள்ளும் கன்னிப்பெண்கள் நெய்,பால் சேர்த்த உணவைச் சாப்பிடக்கூடாது.



Previous Post Next Post