-->

வைகுண்ட ஏகாதசி விரதம் மேற்கொள்வதால் உண்டாகும் நன்மைகள்

வைகுண்ட ஏகாதசியின் மகத்துவம்

நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னித்து நமக்கு மோட்சம் நாள் வைகுண்ட ஏகாதசி நாளாகும்வைகுண்ட ஏகாதசி விழாவானது ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் அமாவாசை முடிந்த பதினொன்றாம் நாள் வளர்பிறை ஏகாதசியில் கொண்டாடப்படுகிறது.

சமஸ்கிருதத்தில் ஏகாதசி என்ற வார்த்தைக்கு பதினொன்று என்று பொருள் உண்டுஅதனால் தான் இவ்விழா பதினொன்றாம் நாள் வளர்பிறையில் கொண்டாடப்படுகிறது.

ஏகாதசி விரத பலன்கள்


வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் மேற்கொண்டு பெருமாளை வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகும்.

காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரம் இல்லை, ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை என்ற பழமொழி உண்டு. அந்த அளவிற்கு முக்கியமான விழாவாக அனைத்து பெருமாள் கோவில்களிலும் அனுஷ்டிக்கப்படுகிறது.

சொர்க்க வாசல் திறப்பு

ஏகாதசி மகிமை

விஷ்ணுபகவான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது,  அவருடைய இருகாதில் இருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினர். அந்த இருவரும் தேவர்களை மிகவும் கொடுமைப் படுத்தினார்கள்.

இந்த அசுர சகோதரர்களை அடக்கமுடியாமல் தேவர்கள் திணறினர். அதனால் விஷ்ணுவின் சக்தியால் உருவான இந்த அசுரர்களை விஷ்ணு பகவான் ஒருவரே அடக்க முடியும் என்ற முடிவில் பகவானிடம் தேவர்கள் முறையிட்டனர்.

பெருமாள் மது கைடபர் மீது போர் தொடுத்தார்ஸ்ரீமந் நாராயணனிடம் யுத்தம் செய்ய முடியாமல் அவரிடம் அசுர சகோதரர்கள் சரண் அடைந்தார்கள்.
அகிலத்தை ஆளும் மகவிஷ்ணுவாகிய தங்களின் சக்தியால் நாங்கள் உருவானதால் எங்களுக்கு நீங்கள் கருணைகாட்ட வேண்டும் என்று பணிவாக வேண்டிக் கொண்டனர்.

அதுமட்டுமல்லாது நாங்கள் வைகுண்டத்தில் பெருமாளுடன் இருக்கும் பாக்கியத்தையும் அளிக்குமாறு அசுர சகோதரர்கள் வரத்தையும் பெற்றனர். தங்களை போல் பலரும் இந்த பாக்கியம் பெற வேண்டும் என்று அசுரர்கள் ஸ்ரீமந் நாராயணனிடம் கேட்டுக் கொண்டனர்.

வைகுண்ட ஏகாதசி நாளில் திருவரங்க வடக்குவாசல் வழியாக, அர்ச்சாவதாரத்தில் தாங்கள் வெளிவரும் போது,  தங்களை தரிசிப்பவர்களுக்கும், தங்களை பின்தொடர்ந்து வருபவர்களுக்கும், அவர்கள் தெரிந்தும்,தெரியாமலும் செய்த பாவங்கள் யாவும் நீங்கி அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

பெருமாளும் அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு ஆசி வழங்கினார்.அதனால் தான் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

ஏகதாசி விரதத்தின்  மகிமை

  • ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க நினைப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிடவேண்டும்
  • ஏகாதசி அன்று இரவு முழுவதும் கண்விழித்து அதிகாலையிலேயே குளித்து விட்டு, பூஜைசெய்து விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
  • ஏகாதசி திதி முழுவதும் முடிந்தவரை உணவு அருந்தாமல் இருக்கவேண்டும். குளிர்ந்த நீரை குடிக்கலாம்.ஏழுமுறை துளசி இலையை சாப்பிடலாம் .
  • முழுவதும் பட்டினியாக இருக்க முடியாதவர்கள் நெய், காய்கனிகள்,பழங்கள், நிலக்கடலை, பால், தயிர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து உண்ணலாம்.
  • ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசி வருகிறது . துவாதசி அன்று அதிகாலையில் உணவு அருந்துவதை பாரணை என அழைக்கிறோம் .
  • துவாதசியன்று அதிகாலையில் உப்பு, புளிப்பு போன்ற சுவை இல்லாத உணவாக நெல்லிக்கனி, சுண்டைக்காய், அகத்தி கீரை இவைகளைசேர்த்து பல்லில் படாமல் கோவிந்தா! கோவிந்தா!, கோவிந்தா!!! என மூன்று முறை கூறி ஆல் இலையில் உணவிட்டு சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும்.
  • நீரை கூட அருந்தாமல் விரதம் இருந்தவர்கள் துளசி தீர்த்தத்தையும், மற்றவர்கள் பகவானுக்கு தானிய உணவை படைத்து (பிரசாதமாக) உண்ணலாம்.
  • ஏகாதசி விரதத்தை மேற்கொள்பவர்கள் எல்லா வித நலன்களும் பெற்று, உடல் நலத்துடனும், ஆரோக்கியத்துடனும், சகல பாக்கியங்களும் பெறுவார்கள்.

Previous Post Next Post