சிக்கன் ஈரல் கிரேவி

ஈரலில் நமது உடலுக்கு ஆரோக்கியம் தரும் உயிர்ச்சத்துக்களான  இரும்பு, செலினியம், துத்தநாகம், போலிக் அமிலம் மற்றும் பி12 உயிர்ச்சத்துக்கள் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது. ரத்த சோகை நோயால் பாதிப்படைந்தவர்களுக்கு ஈரல் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.

ஈரல் மல்டி விட்டமின் அடங்கிய உணவு பொருளாகும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. இறைச்சிகளிலேயே அதிக சக்தியை கொண்ட பகுதி ஈரலாகும்.



தேவையான பொருட்கள்
  1. சிக்கன் ஈரல் – ½ கிலோ
  2. வெங்காயம் – 1 கப்
  3. தக்காளி – 1 கப்
  4. இஞ்சி,பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
  6. மிளகு தூள் – ½ ஸ்பூன்
  7. மிளகாய் தூள் – ½ ஸ்பூன்
  8. கடுகு  - ½ ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் தேவையான அளவு
  11. கறிவேப்பிலை சிறிதளவு
  12. கொத்தமல்லி தழை சிறிதளவு

செய்முறை
  1. முதலில் சிக்கன் ஈரலை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் வதங்கியவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  4. பின்னர் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  5. அத்துடன் மிளகாய் தூள்,மஞ்சள் தூள்.மிளகு தூள்,தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. நன்கு வதங்கியவுடன் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கன் லிவரை சேர்த்து வதக்கவும்.
  7. பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக வைக்கவும்.
  8. ஈரல் வெந்து கிரேவி பதத்திற்கு வந்ததும் கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான சிக்கன் ஈரல் கிரேவி ரெடி.