-->

செரிமானத்தை தூண்டும் ஜவ்வரிசி ஜாம்


ஜவ்வரிசி உடல் செரிமானத்தை ஊக்குவித்து உடலுக்கு சக்தியை அளிக்கிறது. வயிற்று போக்கு அதிகமாக உள்ள நேரத்தில் ஜவ்வரிசியை சாப்பிட்டால் உடனே நின்று விடும். ஜவ்வரிசி பசியில் அடக்கும் தன்மை உள்ளது.


ஜவ்வரசி ஜாம் எப்படி செய்வது



தேவையான பொருட்கள்
  1. ஜவ்வரிசி – 1 கப்
  2. சர்க்கரை – 1 கப்
  3. ரோஸ் எசன்ஸ் – 2 டேபிள் ஸ்பூன்
  4. பாதம்,முந்திரி,திராட்சை,ஏலக்காய்  - தேவையான அளவு
  5. உப்பு – 1 சிட்டிகை
  6. தண்ணீர் – 3 கப்
செய்முறை
  1. முதலில் 1 கப் ஜவ்வரிசியை நன்கு கழுவி தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும்.
  2. ஊறவைத்த ஜவ்வரிசியை வடிகட்டி மிக்ஸ்யில் லேசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  3. பின்னர் ஒரு வாணலியில் 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  4. தண்ணீர் கொதிக்கும் போது 1 சிட்டிகை உப்பு,2 டேபிள் ஸ்பூன் ரோஸ் எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
  5. பின் அதில் சர்க்கரையை சேர்த்து நன்கு கரையும் வரை கலந்து விடவும்.
  6. சர்க்கரை கரைந்தவுடன் ஊறவைத்து அரைத்து வைத்துள்ள ஜவ்வரிசியை அதில் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  7. அத்துடன் பாதம்,முந்திரி,திராட்சை,ஏலக்காய்  ஆகியவற்றையும் சேர்க்கவும்.
  8. நன்கு கைவிடாமல் கிளறி ஜாம் பதத்திற்கு வந்தவுடன் இறக்கினால் சுவையான சத்தான ஜவ்வரிசி ஜாம் ரெடி.
Previous Post Next Post