-->

படுத்த உடனே தூக்கம் வர வேண்டுமா?


தூக்கம்

இன்றைய நவீன வாழ்க்கையின் தேவைகளை பூர்த்தி செய்ய ஓடிக்கொண்டிருக்கும் நாம் பல்வேறு பிரச்சனைகளால் உறக்கம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம்.

இதற்க்கு காரணம் குடும்ப சுமை, வேலைப்பளு,இரவு நேர வேலை,நீண்ட நேரம் செல்போன் உபயோகிப்பது, மன அழுத்தம்,போன்ற காரணங்களால் இரவில் உறக்கம் வராமல் தவிக்கிரோம்.


இளைய தலைமுறையினர் பலரும் இரவில் தூக்கம் வராமல் சமூக வலைதளங்களை பயன்படுத்திக்கொண்டு நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு உறங்க வேண்டிய நேரத்தில் உறங்காமல் விழித்திருந்து பின்பு தூக்கம் வராமல் தவிக்கின்றனர்.

மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 மணி நேரம் உறங்குவது மிகவும் முக்கியம். அப்படி உறங்குவதன் மூலமே உடலின் சுழற்சி ஒரே சமநிலையில் இருக்கும். நமக்கும் ஆசை தான் சீக்கரம் தூங்கி சீக்கிரம் எழ வேண்டும் என்று.

நிம்மதியான தூக்கத்திர்க்கு  சில டிப்ஸ் 



பசும் பால்

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பசும் பாலில் சிறிதளவு தேன் கலந்து இரவில் படுக்கும் முன்பு குடித்தால் நல்ல தூக்கம் வரும்.

வாழைப்பழம்

வாழைப்பழம் பசியை கட்டுபடுத்தி நல்ல தூக்கத்தை தரக்கூடியது. அதிக இரத்த அழுத்தத்தால் தூக்கம் வராமல் தவிக்கும் போது வாழைப்பழம் சாப்பிட்டால் எளிதில் தூக்கம் வரும்.

ஜீரகம்

தண்ணீரில் சிறிதளவு சஜிரகம் சேர்த்து கொதிக்கவைத்து, அதோடு கொஞ்சம் தேன் கலந்து வடிகட்டி இரவில் குடித்துவர தூக்கமின்மை பிரச்சனை தீரும்.

தயிர்

தூக்கமின்மை பிரச்சனை தீர தயிர் ஒரு நல்ல தீர்வாக உள்ளது. தினமும் உணவுடன் தயிரை உட்கொண்டு வந்தால் இரவில் உறக்கம் நன்றாக வரும்.

வெங்காயம்

வெங்காயத்தின் தோலை உரித்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து அளவாக தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்தவுடன் அந்த நீரை வடிகட்டி, வெங்காய தண்ணீரை எடுத்து இரவில் உண்ணும் சுடுசோற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை குறையும்.

வேப்பிலை

வேப்பிலை இயற்கையாக அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. வேப்ப மரத்தின் ஒவ்வொரு பாகமும் வெவ்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்தவை. வேப்பிலையை எடுத்து மிதமான சூட்டில் நன்கு வறுத்து அதை தலையில் வைத்து உறங்கினால் நன்றாக தூக்கம் வரும்.

சுரைக்காய்

சுரைக்காயை அரைத்து அதிலிருந்து சாறு எடுத்து அதே அளவிற்கு நல்லெண்ணெய் கலந்து இரவு உச்சந்தலையில் நன்றாக தேய்த்து வந்தால் தூக்கமின்மை குறையும்.


Previous Post Next Post