-->

சிசேரியன் அறுவை சிகிச்சை என்றால் என்ன? சிசேரியன் எவ்வாறு செய்யப்படுகிறது?

சிசேரியன் அறுவை சிகிச்சை என்றால் என்ன?

கர்ப்பிணிக்கு இயற்கை முறையான பிறப்புறுப்பு வழியாக பிரசவம் நிகழாமல், அடிவயிற்று பகுதியில் ஒரு வெட்டை ஏற்படுத்தி பிரசவம் பார்க்கும் முறைதான் சிசேரியன் முறை.

சிசேரியன் டெலிவரி

குழந்தையானது இயற்கையான முறையில் பிரசவிக்க முடியாமல் போனாலும், அல்லது இயற்கை வழியில் பிரசவம் நிகழ்ந்தால் தாய்க்கோ அல்லது குழந்தைக்கோ பாதிப்பு ஏற்படும் என கருதினாலும் சிசேரியன் அறுவை சிகிச்சை முறை செய்யபடுகிறது. இந்த அறுவை சிகிச்சையின் மூலம் சிக்கலான பிரசவங்களை எளிதாக மருத்துவர்களால் செய்ய முடிகிறது.

சிசேரியன் என்றால் என்ன

எப்போதெல்லாம் சிசேரியன் செய்ய முடிவு செய்யபடுகிறது? அதற்கான காரணங்கள்?

1. இயற்கையான முறையில் பிரசவம் நிகழ சரியான நிலை இல்லாத போது
2. வயிற்றில் உள்ள குழந்தைக்கு முச்சு திணறும்போது
3. வயிற்றில் உள்ள குழந்தை பெரிதாக இருந்தால்
4. புட்டபேறு
5. நச்சு கொடியில் பிரச்சினைகள் ஏற்பட்டால்
6. முதல் குழந்தைக்கு சிசேரியன் செய்யபட்டிருந்தால்
7. இரட்டை குழந்தைகள் கருவில் இருந்தால்
8.  அடிகடி கருச்சிதைவுக்கு உண்டாகும் பெண்கள்
9. குழந்தையானது கர்ப்பப்பையில் குறுக்காக இருந்தாலோ, சாய்ந்து இருந்தாலோ, நச்சுக்கொடி முதலில் வெளி வந்தாலோ, கை முதலில் வெளி வந்தாலோ சிசேரியன் செய்யப்படும்.
10. கர்ப்பப்பை வாய் புற்று நோய், கர்ப்பப்பைக்கு அருகில் கட்டி இருந்தால்
11. குழந்தையின் அதிக எடை இருந்தால், குழந்தை உடல் கனமாக இருந்தால்

இது போன்ற காரணங்கள் உங்களுக்கோ அல்லது குழந்தைக்கோ ஏற்பட்டால் சிசேரியன் செய்யப்படும்.

சிசேரியன் எவ்வாறு செய்யபடுகிறது?

சிசேரியன் செய்ய முடிவு செய்தவுடன் சிசேரியன் அறையில் தாய்க்கு மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது அப்படி இல்லாமல் குறிப்பிட்ட இடம் மட்டும் மரத்துப்போகவும் மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது. இதனால் அந்த இடம் மட்டும் மரத்துப்போய் வலி தெரியாது. ஆனால் தாய்க்கு நினைவிருக்கும்.
மரத்து போனதால் அந்த குறிப்பிட்ட இடத்தில்  வலி தெரியாது. நினைவும் இருக்காது. வயிற்றிலிருந்து குழந்தையை வெளியே எடுப்பதற்காக, தொப்புளுக்குக் கீழே உள்ள கர்ப்பப்பையின் அடிவயிற்றை வெட்டுவார்கள் மருத்துவர்கள். அதன் பிறகு குழந்தை, நஞ்சுக்கொடி, பிரசவப்பை எல்லாவற்றையும் வெளியில் எடுத்து வெட்டப்பட்ட கர்ப்பப்பையையின் அடிவயிற்று பகுதியையும் வெட்டிய இடங்களையும் சேர்த்து தைத்து விடுவார்கள் மருத்துவர்கள்.

சிசேரியன் செய்வதற்கு எவ்வளவு நேரங்கள் ஆகும்?

மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய தொடங்கிய 3 நிமிடங்களுக்குள் பிரசவம் முடிந்து குழந்தை வெளியே வந்து விடும். கழிவுகளை அகற்றுவதற்கும், வெட்டப்பட்ட இடத்தை தைப்பதற்க்கும் என சேர்த்து அதிகபட்சம் 45 நிமிடங்களில் பிரசவம் முடிந்துவிடும்.

அறுவை சிகிச்சை முடிந்த 5 நாட்களுக்குள் நீங்கள் வீட்டிற்கு செல்லலாம். சிசேரியன் அறுவை சிகிச்சை முடிந்து ஒரு மாதத்திற்குள் உங்களுடைய எல்லா வேலைகளையும் நீங்களே செய்து கொள்ளலாம்.

சிசேரியன் செய்வதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?

1. தொற்றுநோயோ அல்லது இரத்தக்கசிவோ ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
2. கர்ப்பப்பையை வெட்டிய இடம் பலமில்லாமல் இருக்க வாய்ப்புள்ளது. இதனால் குடலிறக்கம் ஏற்படலாம்.
3. முதல் பிரசவத்தில் சிசேரியன் செய்யப்ட்டிருந்தால் அடுத்த பிரசவமும் சிசேரியனாக இருக்கும் என்ற கவலை வேண்டாம். அது இயற்கையான பிரசவமாக இருக்க வாய்ப்புகள் உண்டு. ஒரு சில நேரங்களில் அடுத்ததும் சிசேரியனாக இருக்க வாய்ப்புண்டு.

பிரசவ முறைகள்

சிசேரியன் முறையில் வாக்கும் டியூப், போர்செப்ஸ் போன்ற முறைகளும் பயன்படுத்தபடுகின்றன.

இந்த பதிப்பானது மேலும் பல விளக்கங்களுடன் புத்தக வடிவில் Google Play Store மற்றும் அமேசான் தளத்தில் விற்பனைக்கு உள்ளது. இந்த புத்தகமானது உங்களுக்கோ அல்லது உங்கள் மகள், மகன், நண்பர்கள், உறவினர்கள், கர்ப்பம் தரிக்க விரும்புவர்கள், கார்ப்பமானவர்கள் போன்றோர் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம்.




அமேசான் தளத்தில் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.  


Google Play Storeல் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.

Previous Post Next Post