-->

திருமண வரம் தரும் பங்குனி உத்திரம் சிறப்புகள்


பங்குனி உத்திரம் என்றால் என்ன?  

நாளை பங்குனி உத்திரம் 21.03.2019. பங்குனி மாதத்தில் பவுர்ணமியும், உத்திர நட்சத்திரமும் சேரும் நாளை தான் பங்குனி உத்திரம் என்று அழைக்கிறோம்.  ஒவ்வொரு மாதத்தில் வரும் பவுர்ணமிக்கும் ஒவ்வொரு தனிச்சிறப்புண்டு.

பங்குபி உத்திர சிறப்புகள்


பங்குனி மாதத்தில் வரும் பவுர்ணமி அன்று உத்திர நட்சத்திரமும் சேர்ந்தது வருவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். முருகனை வழிபடும் ஒரு சிறந்த நாளாக பங்குனி உத்திரம் அமைகிறது.

இந்நாளில் முருகனுக்கு பால் குடம் எடுப்பது,காவடி எடுப்பது போன்ற பல்வேறு பிரார்த்தனைகள் நிறைவேற்றப்படும். அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பங்குனி உத்திரம் அன்று விரதம் இருந்து முருகனை வழிபடுவோர்க்கு சிறந்த பலன்கள் கிடைக்கும்.

பங்குனி உத்திரத்தின் மகிமைகள்


  1. பங்குனி உத்திரம் தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி முருகப்பெருமானை வணங்க வேண்டும்.
  2. பங்குனி உத்திரம் அன்று விரதம் இருந்து வழிபட்டால் நினைத்ததை நடத்திக் கொடுப்பார் முருகப் பெருமான்.
  3. அந்த நாள் முழுவதும் முருகனின் நாமமான ஓம் சரவண பவஎன்னும் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
  4. திருமணம் நடைபெறாமல் இருப்பவர்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும்.
  5. பங்குனி உத்திரத்தில் விரதம் இருந்தால் திருமணம் கைகூடும்  என்பதனாலேயே பங்குனி உத்திரம் விரதத்திற்கு திருமண விரதம் என மற்றொரு பெயரும் உண்டும்.
  6. திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் இன்று விரதம் இருந்து இறைவனை வழிபாட்டால் நிச்சயம் விரைவில் திருமணம் நடைபெறும்.
  7. பங்குனி உத்திரம் அன்று முருகனின் திருக்கல்யாணத்தை பார்க்க வேண்டும். ஏன் என்றால் பங்குனி உத்திர நாளில் தான் முருகனுக்கும் ,தெய்வானைக்கும் திருமணம் நடைபெற்றது.
  8. அது போல திருமணத்தை பார்ப்பவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும்.
  9. திருக்கல்யாணத்தை பார்பவருக்கு களத்திற தோஷம்,சனி தோஷம்.செவ்வாய் தோஷம் போன்ற தோஷங்களினால் திருமணம் நடைபெறாமல் இருந்தாலோ, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தாலோ விரைவில் தோஷம் நிவர்த்தி அடையும்.
  10. சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயன் ஐயப்பன் இந்த பூமியில் அவதரித்ததும் இந்த நன்னாளில் தான்.
  11. கலைமகள் பிரம்மாவின் நாவில் அமர்ந்ததும் இந்த நாளில் தான்.
  12. மகாலட்சுமி பூமியில் அவதரித்ததும் இந்த நாளில் தான்.
  13. இப்படி பங்குனி உத்திரத்திற்கு பல சிறப்புகள் உண்டு.
  14. ஒருவர் தொடர்ந்து 48 ஆண்டுகள் பங்குனி உத்திர விரதம் இருக்கிறாரோ அவருக்கு மறுபிறவியானது தெய்வப்பிறவியாக அமையும். அதோடு அவர் பிறப்பு இறப்பு என்ற கால சக்ரத்தில் இருந்து விடுபட்டு மோட்ச நிலையை அடைவர் என்று ஞான நூல்கள் குறிப்பிடுகின்றன.
  15. பங்குனி உத்திர நாளில் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து ஒருமித்து முருகனை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால் தம்பதிகளிடையே ஒற்றுமை ஏற்படும்.
  16. பிரிந்த கணவன் , மனைவி மீண்டும் சேர்ந்து வாழும் வரம் கிடைக்கும்.
  17. சுமங்கலி பெண்களில் பலர் இன்று கோயிலிற்கு சென்று புதுத்தாலியை மாற்றிக் கொள்வது சிறப்பாகும்.
  18. பங்குனி உத்திர நாளில் விரதம் இருந்து வழிபடுவோர்க்கு அனைத்துக் கஷ்டங்களும் விலகி, வாழ்க்கையில் பல்வேறு சிறப்புகள் வந்து சேரும்.





Previous Post Next Post