-->

கறிவேப்பிலையின் மருத்துவ பயன்கள்


கறிவேப்பிலை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

நம் சமையலில் எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் கறிவேப்பிலை இல்லாத ஒரு சமையல் இருக்கவே முடியாது. அவ்வளவு இன்றியமையாதது கறிவேப்பிலை. கறிவேம்பு இலைஎன்ற சொல் தான் பிற்காலத்தில் மருவிக் கறிவேப்பிலை என்று ஆனது. 


கறிவேப்பிலை உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படுகிறது. ஆனால் அதன் நற்குணங்கள் தெரியாமல் பலரும் அதை சாப்பிடாமல் ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். சைவம், அசைவம் என எந்த உணவு பொருளாக இருந்தாலும் அதில் கறிவேப்பிலை முக்கிய பங்கு வகிக்கிறது.

கறிவேப்பிலை தனக்கென்று ஒரு சுவையும்,மனமும், பெற்ற ஒரு உணவு பொருளாகும். இதன் சுவை காரத்தன்மையும், கசப்புத் தன்மையும் கொண்டாதாகும். இரண்டு வகையான கறிவேப்பிலை உள்ளன. அவை நாட்டு கறிவேப்பிலை ,காட்டு கறிவேப்பிலை ஆகும். நாட்டுக் கறிவேப்பிலை சமையல் செய்வதற்கும் காட்டுக் கறிவேப்பிலை மருந்தாகவும் பயன்படுகின்றன.

கறிவேப்பிலையில் 63 சதம் நீரும், 6.1 சதவீதம் புரதமும், ஒரு விழுக்காடு கொழுப்பும், 4 விழுக்காடு தாதுப்புகளும், 6.4 சதவீதம் நார்ச்சத்தும், 18.7 சதவீதம் மாவுச்சத்தும் இருக்கின்றன.

கறிவேப்பிலையின் மருத்துவ பயன்கள்

  1. கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் சோர்வை போக்க கறிவேப்பிலை இலையின் சாறுடன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கசப்பு சுவை தெரியாமல் இருக்க சிறிதளவு நாட்டுச் சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும்.
  2. மலச்சிக்கல் பாதிப்பு குறைய கொதிக்கும் நீரில் கறிவேப்பிலையைச் சேர்த்து கொதிக்க வைத்து அத்துடன் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் தீர்வதுடன் மூல நோயினால் ஏற்படும் பாதிப்பும் குறையும்.
  3. கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் அழிந்துவிடும், வயிற்று வலியும் ஏற்படாது.
  4. கறிவேப்பிலையை காயவைத்து பொடியாக்கி அந்த பொடியை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் நன்கு பசி எடுக்கும். பொடியை தேநீரிலும் கலந்து குடிக்கலாம்.
  5. கறிவேப்பிலைச் சாற்றினைக் குழந்தைகளுக்குப் பருகக் கொடுப்பதன் மூலம் குழந்தைப் பருவத்தில் ஏற்படும் வயிற்று வலி குறைக்கப்படுகிறது.
  6. வெறும் வயிற்றில் கரிவேப்பிலையை மென்று சாப்பிட்டு வந்தால் வயிறு, கை, தொடை பகுதியில் உள்ள உள்ள தேவயற்ற கொழுப்புகள் குறையும்.
  7. இரத்த சோகை உள்ளவர்கள் உணவில் கறிவேப்பிலையை அதிக அளவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் இரத்த சோகையை கட்டுப்படுத்தலாம்.
  8. அஜீரணத்தினால் ஏற்படும் வயிற்று வலியை குணபடுத்த மிக சிறந்த ஒரு மருந்தாக பயன்படுகிறது.
  9. சளித் தொந்தரவில் இருந்து விடுபட கறிவேப்பிலை பொடியை தேனுடன் கலந்து தினமும் இரவு படுக்கும் முன்பு சாப்பிட்டு வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
  10. கறிவேப்பிலை அரைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி காயவைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அந்த எண்ணெய்யை தினமும் பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வு நின்று முடி நன்கு கரு கருவென்று வளரும்.
  11. கறிவேப்பிலையை அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பின் குளித்து வந்தால் முடி நன்கு வளரும்.



Previous Post Next Post