-->

12 மாதங்களில் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தான் காதலில் கெட்டிகாரர்களாம்

பிறந்த மாத பலன்கள்

'பிறந்த மாதத்திற்கேற்ப வாழ்க்கை அமையும்' என்பது கேட்பதற்கு சற்று விசித்திரமாகவே தோன்றும். ஒருவர் பிறந்த மாதத்திற்கும் அவரது வாழ்வின் குணநலனுக்கும் நிறைய தொடர்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

எந்த மாததில் பிறந்தவர்கள் காதலில் கில்லாடிகள்


இது ஒருபுறமிறக்க ஒருவர் எந்த மாதம் பிறந்தால் என்ன மாதிரியான குணநலன்கள் இருக்கும் என ஆராய்ச்சிகளும் ஒரு பக்கம் நடந்து வருகின்றன. உங்களின் பிறந்த மாதத்தை வைத்து எப்படி உங்கள் வாழ்க்கையில் மறைந்து இருக்கும் ரகசியத்தைக் கண்டுபிடிப்பது என்பது பற்றி இங்கே விளக்கப்படுகிறது. ஜோதிடமானது உங்கள் பிறந்த மாதம் உங்களைக் குறித்து என்னதான் கூறுகிறது என்று பாருங்கள்.

ஜனவரி மாதம் பிறந்தவர்கள்

ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் குணங்கள்

ஜனவரி மாதம் பிறந்தவர்கள் 1ம் எண்காரர்களாக அறியப்படுகிறார்கள். இவர்கள் சுதந்திரமானவர்கள், எதையும் ஆராய்ந்து கணக்கிடுபவர்கள், இவர்கள் பிறவியிலேயே தலைமை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் புதியவற்றை உருவாக்கும் திறன் கொண்டவர்கள், எடுத்த காரியங்களை எப்படியாவது நடத்தி காட்டி விடுவார்கள். இவர்கள் மற்ற மாதங்களில் பிறந்தவர்களை காட்டிலும் பாரம்பரிய வாழ்வில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

பிப்ரவரி மாதம் பிறந்தவர்கள்

பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் குணங்கள்

பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்களின் எண் 2. இவர்கள் உணர்வுப் பூர்வமானவர்களாக இருப்பார்கள். அன்பைத் தேடி அலைபவர்கள். அன்பு காட்டுபவர்களிடம் அடிமையாகவே இருப்பார்கள். 'காதல்' இவர்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும்.

மார்ச் மாதம் பிறந்தவர்கள்

மார்ச் மாதம் பிறந்தவர்கள் குணங்கள்

மார்ச் மாதத்தில் பிறந்தவர்களின் எண் 3. எதையும் சரியாக கணக்கு போடுவதில் வல்லவர்கள். புகழின் உச்சியில் அமரக்கூடிய அதிர்ஷ்டம் இவர்களுக்கு உண்டு. பணம் சம்பாதிப்பதில் வல்லவர்கள். ஆனால் செலவு செய்வதில் அதைவிட வேகமாக இருப்பார்கள். இவர்கள் பிறரால் ஏமாற்றபடுவார்கள்.

ஏப்ரல் மாதம் பிறந்தவர்கள்

ஏப்ரல் மாதம் பிறந்தவர்கள் குணங்கள்

ஏப்ரல் மாதத்திற்கு உரிய எண் நான்காகும். இவர்கள் பிடிவாத தன்மை கொண்டவர்கள். இவர்கள் எல்லாருக்கும் கட்டளை போடும் இடத்தில் இருப்பார்கள். புத்திக்கூர்மை மிக்கவர்கள், எதையும் புதிதாக யோசிப்பார்கள். இவர்களை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும்.

மே மாதம் பிறந்தவர்கள்

மே மாதம் பிறந்தவர்கள் குணங்கள்

மே மாதத்திற்கு உரிய எண் 5 தாகும். இவர்கள் எதில் கை வைத்தாலும் அதில் புகழ் பெற்றவர்களாக விளங்குவார்கள். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மிகவும் மரியாதை கொடுப்பார்கள். கலகலப்பாக இருக்கும் குணம் உள்ளவர்கள். ஆகவே, எப்போதும் நண்பர்களுடனே இருப்பீர்கள்.

ஜூன் மாதம் பிறந்தவர்கள்

ஜூன் மாதம் பிறந்தவர்கள் குணங்கள்

ஜூன் மாதம் பிறந்தவர்களுக்கான எண் 6. இவர்கள் ஒரு ரொமண்டிக் பேர்வழியாக இருப்பார்கள். காதல் விவகாரங்களில் இவர்களை மிஞ்ச ஆள் கிடையாது. கொஞ்சம் பொறாமை குணம் கொண்டவர்கள். ரொம்ப தைரியமானவர்கள். இவர்களுக்கு தன்னம்பிக்கை கொஞ்சம் குறைவுதான். எளிதில் உணர்ச்சிவசபடுவார்கள்.

ஜூலை மாதம் பிறந்தவர்கள்

ஜூலை மாதம் பிறந்தவர்கள் குணங்கள்

ஜூலை மாதம் பிறந்தவர்களுக்கான எண் 7. இவர்களை யாரும் அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாது. ரகசியமானவர்கள். அமைதியான குணம் கொண்டவர்கள். கடின உழைப்புக்கு சொந்தகாரர்கள். நேர்மையாக இருக்க விரும்புவார்கள். மற்றவர்களின் உணர்வுகளை ரொம்பவே மதிப்பார்கள். மற்றவர்கள் செய்யும் தவறுகளை மன்னித்து ஏற்று கொள்வார்கள். பழிவாங்கும் குணம் அற்றவர்கள்.

ஆகஸ்ட் மாதம் பிறந்தவர்கள்

ஆகஸ்ட் மாதம் பிறந்தவர்கள் குணங்கள்

ஆகஸ்ட் மாதம் பிறந்தவர்களுக்கான எண் 8. நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். தன்னை சுற்றியிருப்பவர்களை குறித்து அக்கறை கொண்டவர்கள். எதற்கும் துணிந்தவர்கள். பயம் என்றால் என்ன என்று தெரியாதவர். வாழ்க்கையில் உறுதியான முடிவுகளை எடுப்பீர்கள். தலைமை பண்புகள் அதிகம் இருக்கும். தான் என்ற எண்ணம் இவர்களிடம் அதிகம் இருக்கும். சுதந்திரமாக இருக்கவே விரும்புவார்கள். எதையும் புதுவிதமாக யோசிக்கும் திறன் கொண்டவர்கள்.

செப்டம்பர் மாதம் பிறந்தவர்கள்

செப்டம்பர் மாதம் பிறந்தவர்கள் குணங்கள்

செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் ஒன்பதாம் எண்ணின் ஆளுகைக்கு உட்பட்டவர்கள். இவர்கள் புத்திக்கூர்மை மிக்கவர்கள். விட்டுக்கொடுக்கும் குணம் கொண்டவர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். எதிலும் வெற்றி கொடி நாடவே விரும்புவார்கள்.

அக்டோபர் மாதம் பிறந்தவர்கள்

அக்டோபர் மாதம் பிறந்தவர்கள் குணங்கள்அக்டோபர் மாதம் பிறந்தவர்களுக்கான எண் 10. எதையாவது ஒன்றை அடையவேண்டும் என்று நினைத்துவிட்டால், அடைந்தே தீருவார்கள். வாக்குவாதத்தில் ஈடுபடுவது இவர்களின் குறை. பிறரை பழி தீர்ப்பது, வஞ்சிப்பது இவர்களோடு பிறந்த குணங்கள். இவர்கள் தாங்கள் ஈடுபட்டிருக்கும் துறையில் புகழ்பெற்ற தலைவராக இருப்பார்கள்.

நவம்பர் மாதம் பிறந்தவர்கள்

நவம்பர் மாதம் பிறந்தவர்கள் குணங்கள்

நவம்பர் மாதத்திற்கான பிறந்தவர்களுக்கான எண் 11. இவர்கள் உணர்வுப்பூர்வமானவர்கள். எதையும் நேர்மறையாகவே யோசிப்பார்கள். உணர்ச்சி பூர்வமானவராக விளங்குவார்கள். எளிதில் உணர்ச்சி வசபடக்கூடியவர்கள். இவர்கள் மற்றவர்களுக்கு நல்ல ஆசானாக திகழ்வார்கள். விட்டு கொடுக்கும் குணம் கொண்டவர்கள். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்தே செய்வார்கள்.

டிசம்பர் மாதம் பிறந்தவர்கள்

டிசம்பர் பாதம் பிறந்தவர்கள் குணங்கள்


டிசம்பர் மாதம் பிறந்தவர்களுக்கான எண் 12. இவர்கள் எதையும் யதார்த்தமாக யோசிப்பார்கள். நிலையான வாழ்க்கை முறையில் நம்பிக்கை கொண்டவர்கள். சில நேரங்களில் பொறுப்புகளை குறித்து போதிய கவனமில்லாமல் இருப்பார்கள். இவர்கள் அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கை கொண்டவர்கள்.
Previous Post Next Post