Header Ads

கண் பிரச்சனைகளை நீக்கி, சருமத்தை தங்கம் போல மின்ன வைக்கும் கேரட்

கேரட் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

அன்றாடம் எளிதில் கிடைக்க கூடிய விலை மலிவான மற்றும் ஊட்டசத்து மிகுந்த காய்கறிகளில் ஒன்று கேரட். கேரட்டானது செடியின் வேர்ப் பகுதியில் வளரக்கூடியது. ஆரஞ்சு, சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் கேரட் கிடைக்கின்றது.

கேரட் அழகு குறிப்புகள்


இயற்கையாகவே இனிப்பான சுவை கொண்ட கேரட்டை விரும்பாதவர்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இருக்கவே முடியாது. கேரேட்டை தினமும் எடுத்துக் கொள்பவர்களுக்கு கண்பார்வை சம்மந்தமான பிரச்சனை குறைந்து கண்பார்வை பளிச்சென தெரியும்.

கேரட் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் உள்ள தேவையற்ற  கொழுப்புகள் கரையும். உடலுக்கு நன்மை சேர்க்கும் பல்வேறு சத்துக்கள் கேரட்டில் நிறைந்துள்ளதால் கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

கேரட்டில் அதிக அளவில் நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளது. கேரட்டை உணவுடன் அடிக்கடி சாப்பிடுவதன் மூலம். கண்கள் ஆரோக்கியம் அடையும், மாலைக் கண் நோய் வராமல் தடுக்கும் சக்தி கொண்டது கேரட்.

கேரட் மருத்துவப் பயன்கள்

1. கேரட்டில் வைட்டமின் ஏ சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால் கண்களுக்கு பார்வை திறனை அளிக்கிறது.
2. கேரட்டில் உள்ள சத்துக்கள் தோலிற்கு புதுப் பொலிவை கொடுக்கிறது.
3. உடலை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள கேரட் மிகவும் பயன்படுகிறது.
4. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து குடல் புண் வராமல் தடுக்கலாம்.
5. நெஞ்சு எரிச்சலுக்கு தினமும் காரட் சாறு பருகுவது நல்லது.
6. கேரட் சாருடன் சிறிதளவு இஞ்சி சாறு சேர்த்து குடித்து வந்தால் வாய்வு தொல்லை நீங்கும்.
7. வயிற்றில் கற்கள், புண்கள்,கட்டிகள் இருப்பவர்களுக்கு கேரட் ஜூஸ் ஒரு சிறந்த மருந்தாகும்.
8. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து சீக்கிரம் குணமாக தினமும் காரட் சாறு அருந்துவது நல்லது.
9. கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது.
10. கேரட் சாறுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.
11. கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிட்டால் மார்பகப் புற்று ஏற்படாது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
12. கேரட்டானது பசியைத் தூண்டி, சிறுநீர் பெருக்கியாக செயல்படுகிறது.
13. சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் எரிச்சலை குணமாக்க, கேரட்டை  பச்சடி போல செய்து சாப்பிடலாம்.
14. வாரத்திற்கு மூன்று முறை காரட் சாப்பிட்டால் மாலைக்கண் நோய் ஏற்படாது.
கேரட் பயன்கள்

15. வைட்டமின் A சத்து மிகுதியாக உள்ளதால் கேரட்டை சாப்பிட்டால் கண்பார்வை குறைபாடு, கண் பொங்குதல் போன்ற பிரச்சனைகளுக்கு  நல்ல பலன் தரும்.
16. கேரட்டை தொடர்ந்து சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுவின் அளவை அதிகரிப்பதோடு, விந்தணுவின் அடர்த்தியும் அதிகரிக்கும். எனவே குழந்தைப் பெற்றுக் கொள்ள நினைப்பவர்கள் தினமும் கேரட்டை தவறாமல் உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
17. மூட்டு வலியில் இருந்து விடுபட வேண்டுமானால், தினமும் கேரட்டை தவறால் சாப்பிட்டு வர வேண்டும். ஏனெனில் அதில் உள்ள வைட்டமின் சி, எலும்புகளை வலுவாக்கும்.
18. காலை நேரத்தில் அரை டம்ளர் கேரட் சாறு குடித்துவர வயிற்றில் உள்ள புழு, பூச்சிகள் வெளியேறி வயிறு சுத்தமாகும்.

19. ஒரு டம்ளர் கேரட் சாறுடன் சிறிது ஏலக்காய் பொடி, பனங்கற்கண்டு சேர்த்து காலையில் குடித்துவர உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு ஏற்படும்.  மேலும் இது உடலுக்கு குளிர்ச்சியையும் தருகிறது.

கண் பிரச்சனைகளை நீக்கி, சருமத்தை தங்கம் போல மின்ன வைக்கும் கேரட்

கேரட் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் அன்றாடம் எளிதில் கிடைக்க கூடிய விலை மலிவான மற்றும் ஊட்டசத்து மிகுந்த காய்கறிகளில் ஒன்று கேரட். கேரட்டானது செடியின் வேர்ப் பகுதியில் வளரக்கூடியது. ஆரஞ்சு, சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் கேரட் கிடைக்கின்றது. இயற்கையாகவே இனிப்பான சுவை கொண்ட கேரட்டை விரும்பாதவர்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இருக்கவே முடியாது. கேரேட்டை தினமும் எடுத்துக் கொள்பவர்களுக்கு கண்பார்வை சம்மந்தமான பிரச்சனை குறைந்து கண்பார்வை பளிச்சென தெரியும். கேரட் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும். உடலுக்கு நன்மை சேர்க்கும் பல்வேறு சத்துக்கள் கேரட்டில் நிறைந்துள்ளதால் கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது. கேரட்டில் அதிக அளவில் நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளது. கேரட்டை உணவுடன் அடிக்கடி சாப்பிடுவதன் மூலம். கண்கள் ஆரோக்கியம் அடையும், மாலைக் கண் நோய் வராமல் தடுக்கும் சக்தி கொண்டது கேரட். கேரட் மருத்துவப் பயன்கள் 1. கேரட்டில் வைட்டமின் ஏ சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால் கண்களுக்கு பார்வை திறனை அளிக்கிறது. 2. கேரட்டில் உள்ள சத்துக்கள் தோலிற்கு புதுப் பொலிவை கொடுக்கிறது. 3. உடலை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள கேரட் மிகவும் பயன்படுகிறது. 4. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து குடல் புண் வராமல் தடுக்கலாம். 5. நெஞ்சு எரிச்சலுக்கு தினமும் காரட் சாறு பருகுவது நல்லது. 6. கேரட் சாருடன் சிறிதளவு இஞ்சி சாறு சேர்த்து குடித்து வந்தால் வாய்வு தொல்லை நீங்கும். 7. வயிற்றில் கற்கள், புண்கள்,கட்டிகள் இருப்பவர்களுக்கு கேரட் ஜூஸ் ஒரு சிறந்த மருந்தாகும். 8. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து சீக்கிரம் குணமாக தினமும் காரட் சாறு அருந்துவது நல்லது. 9. கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது. 10. கேரட் சாறுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும். 11. கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிட்டால் மார்பகப் புற்று ஏற்படாது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 12. கேரட்டானது பசியைத் தூண்டி, சிறுநீர் பெருக்கியாக செயல்படுகிறது. 13. சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் எரிச்சலை குணமாக்க, கேரட்டை பச்சடி போல செய்து சாப்பிடலாம். 14. வாரத்திற்கு மூன்று முறை காரட் சாப்பிட்டால் மாலைக்கண் நோய் ஏற்படாது. 15. வைட்டமின் A சத்து மிகுதியாக உள்ளதால் கேரட்டை சாப்பிட்டால் கண்பார்வை குறைபாடு, கண் பொங்குதல் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல பலன் தரும். 16. கேரட்டை தொடர்ந்து சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுவின் அளவை அதிகரிப்பதோடு, விந்தணுவின் அடர்த்தியும் அதிகரிக்கும். எனவே குழந்தைப் பெற்றுக் கொள்ள நினைப்பவர்கள் தினமும் கேரட்டை தவறாமல் உணவில் சேர்த்து கொள்வது நல்லது. 17. மூட்டு வலியில் இருந்து விடுபட வேண்டுமானால், தினமும் கேரட்டை தவறால் சாப்பிட்டு வர வேண்டும். ஏனெனில் அதில் உள்ள வைட்டமின் சி, எலும்புகளை வலுவாக்கும். 18. காலை நேரத்தில் அரை டம்ளர் கேரட் சாறு குடித்துவர வயிற்றில் உள்ள புழு, பூச்சிகள் வெளியேறி வயிறு சுத்தமாகும். 19. ஒரு டம்ளர் கேரட் சாறுடன் சிறிது ஏலக்காய் பொடி, பனங்கற்கண்டு சேர்த்து காலையில் குடித்துவர உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு ஏற்படும். மேலும் இது உடலுக்கு குளிர்ச்சியையும் தருகிறது.
Book rating: 88 out of 100 with 20 ratings

1 comment: