-->

குழந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்களா நீங்கள்? அப்போ இத பாருங்க


உங்கள் குழந்தைகள்  ஆரோக்கியமாக வளர சாப்பிட வேண்டிய உணவுகள்

குழந்தை வளர்ப்பில் குழந்தைகளின் உடல் வளர்ச்சி என்பது முக்கியமான ஒன்றாகும். அவர்களுக்கு நாம் என்ன உணவு கொடுக்கிறோம் என்பதை பொறுத்தே அவர்களின் வளர்ச்சி அமையும்.

குழந்தைகள் புரதசத்து அதிகம் உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது அவர்களின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் நல்லதாகும். சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு உணவுப் பழக்கவழக்கங்களை நாம் கற்றுகொடுக்க வேண்டும்.

குழந்தைகள் எடுத்துகொள்ளும் உணவில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் நிறைந்திருப்பது அவசியமாகும். உடல் வளர்ச்சி நன்றாக இருக்க நாம் எந்தெந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

முட்டை

முட்டையில் பல விதமான நல்ல சத்துக்கள் அடங்கியுள்ளன. புரதசத்து அதிகம் கொண்ட உணவுகளில் முட்டை முதல் இடத்தில் உள்ளது. குழந்தைகளின் உணவில் முட்டை மிக முக்கிய உணவாகும்.
முட்டை உடல் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. அத்துடன் செல்களின் வளர்ச்சியும் அதிகரிக்கவும் உதவுகிறது. தினமும் ஒரு வேகவைத்த முட்டை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக அமையும்.


முழு தானியங்கள்
பருப்பு வகைகள், முழு தானியங்கள் போன்ற உணவுகளை குழந்தைகளுக்கு அதிக அளவில் தர வேண்டும். இதனால் அவர்களின் மெட்டபாலிசன் சீராக வேலை செய்யும். மேலும், உடல் வளர்ச்சியை அதிகரிக்க முழு தானியங்கள் பெரும்பாலும் உதவும்.

பால்
பாலில் உள்ள சத்துக்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு அதிக அளவில் பயன்படுகிறது. தினமும் பால் குடிப்பது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
கால்சியம், வைட்டமின் டி, புரசத்து போன்றவை இதில் நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு அவசியம் இதனை தினமும் கொடுக்க வேண்டும். இதில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுபடுத்துகிறது.

சிக்கன்
பிராய்லர் கோழிகளை காட்டிலும் நாட்டு கோழிகளை குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்க வேண்டும்.  பிராய்லர்  கோழியில் உள்ள கெட்ட கொழுப்பு உடலுக்கு கேடு விளைவிக்கிறது. எனவே அதை தவிர்த்து நாட்டு கோழிகளை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்க வேண்டும்.

சோயா பீன்ஸ்
ஆரோக்கியமான உணவுகளில் சோயா பீன்சும் ஒன்று. சிக்கன், முட்டை பிடிக்காத குழந்தைகளுக்கு இதனை பரிமாறலாம். இவற்றில் புரதசத்து அதிக அளவில் இருப்பதால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அத்துடன் முழு உடல் வளர்ச்சிக்கும் இது பயன்படும்.

காய்கறிகள்
குழந்தைகளின் உணவில் இரும்புசத்து, மெக்னீசியம், வைட்டமின் பி, , கே போன்றவை அதிக அளவில் உள்ள காய்கறிகளை சேர்த்து கொள்வது நல்லது. முக்கியமாக கேரட், பீட்ரூட், பீன்ஸ், ப்ரோக்கோலி, கீரை வகைகள் ஆகியவற்றை அதிக அளவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

பழங்கள்
பொதுவாகவே குழந்தைகளுக்கு அந்தந்த பருவ நிலைகளில் கிடைக்கும் உணவுகளை சாப்பிட கொடுத்தாலே உடலின் வளர்ச்சி நன்றாக இருக்கும். மேலும், இது போன்ற பருவ நிலை பழங்கள் எதிர்ப்பு சக்தி குறைபாட்டை குறைக்கும் சரி செய்யும்.


Previous Post Next Post